Published : 10 Dec 2019 12:47 PM
Last Updated : 10 Dec 2019 12:47 PM

கார்த்திகை தீபம்: கிழக்கு பார்த்து விளக்கேற்றுங்கள்! 

வி.ராம்ஜி


கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றினாலே புண்ணியம். அதிலும் கிழக்குப் பார்த்து விளக்கேற்றினால், மகா புண்ணியம் என்கிறார்கள்.
கார்த்திகை மாதத்தில், தினமும் காலையும் மாலையும் வீட்டு வாசலில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. பிரம்ம முகூர்த்தம் என்று சொல்லப்படுகிற காலை 4.30 முதல் 6 மணிக்குள் விளக்கேற்றினால், வீட்டின் தரித்திரம் விலகும். நம் வீட்டுக்குழந்தைகள் கல்விகேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கும்.


அதேபோல், மாலையில் 6 மணிக்கு வாசலில் விளக்கேற்றுவது சிறப்பு வாய்ந்தது. மாலையில் வாசலில் விளக்கேற்றினால், மகாலக்ஷ்மி நம் வீட்டுக்கு இன்முகத்துடன் வாசம் செய்வாள் என்பதாக ஐதீகம்.


மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாக்கோலமிடுங்கள். அகல்விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில், வரிசையாக தீபமேற்றுங்கள்.


பொதுவாகவே, தீபமேற்றும்போது, நல்லெண்ணய் கொண்டு விளக்கேற்றுவதே உத்தமம். எனவே அகல்விளக்கில் நல்லெண்ணெய் விட்டு தீபமேற்றுங்கள். முக்கியமாக, வழக்கமாக பூஜையறையில் ஏற்றப்படும் விளக்கில் பூவைத்து தீபமேற்றுங்கள்.


கார்த்திகை தீபத்திருநாளில், வீட்டு பூஜையறை, வீடு முழுவதும், வீட்டு வாசல் என விளக்கேற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


மாலையில், கிழக்குப் பார்த்து விளக்கேற்றினால் வீட்டின் தரித்திரம் விலகும். புண்ணியம் பெருகும். மேற்குப் பார்த்து விளக்கேற்றினால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x