Published : 10 Dec 2019 10:27 AM
Last Updated : 10 Dec 2019 10:27 AM

கார்த்திகை விரதம் இப்படித்தான்! 

வி.ராம்ஜி


திருக்கார்த்திகை தீபத் திருநாளில், முறையாக விரதம் இருந்து விளக்கேற்றி பூஜித்தல், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


திருக்கார்த்திகை தீபம் ரொம்பவே மகத்துவம் வாய்ந்த நன்னாள். இந்தநாளில், விரதம் மேற்கொள்வது நம் வாழ்வை வளப்படுத்தும் என்பது நிச்சயம்.


இன்று 10.12.19 திருக்கார்த்திகை தீபம். இந்தநாளில், விரதம் மேற்கொள்வது சிறப்புக்கு உரியது. காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜையறையில் உள்ள தூசுகளையும் அழுக்குகளையும் நீக்குங்கள். பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக்கொள்ளவேண்டும்.


மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுங்கள். மாக்கோலமிடுங்கள். அகல்விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்றுங்கள். வீட்டு வாசலில், வரிசையாக தீபமேற்றுங்கள்.


பொதுவாகவே, தீபமேற்றும்போது, நல்லெண்ணய் கொண்டு விளக்கேற்றுவதே உத்தமம். எனவே அகல்விளக்கில் நல்லெண்ணெய் விட்டு தீபமேற்றுங்கள். முக்கியமாக, வழக்கமாக பூஜையறையில் ஏற்றப்படும் விளக்கில் பூவைத்து தீபமேற்றுங்கள்.


பொரி உருண்டை நைவேத்தியம் வைத்து படையல் செய்து பூஜியுங்கள். அம்மையும் அப்பனுமாகத் திகழும் சிவபார்வதியை மனதார வேண்டிக்கொண்டால், வீட்டில் சகல செளபாக்கியங்களைப் பெறலாம். மேலும் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அதுமட்டுமா? நல்ல வாழ்க்கைத் துணை அமையும் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x