Published : 22 Nov 2019 12:55 PM
Last Updated : 22 Nov 2019 12:55 PM
இந்த வார விசேஷங்கள்
நவம்பர் 23, சனிக்கிழமை. துவாதசி. கிருஷ்ண பட்ச வைஷ்ணவ ஏகாதசி. திருச்சானூர் பைராகிமடம் தாயார் உத்ஸவம் ஆரம்பம். திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தானம் மண்டபம் எழுந்தருளல்.
*************************************************************************
நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை. திரயோதசி. கிருஷ்ண பட்ச மகா பிரதோஷம். மாத சிவராத்திரி வாஸ்து புருஷன் நித்திரை விட்டு எழுதல். ஸ்ரீவாஞ்சியம் பானுவார தீர்த்தம். மதுரையில் இம்மையில் நன்மை தருவார் கோயில், சிதம்பரம் சிவபெருமான் சந்நிதியில் சிறப்பு பூஜை.
*****************************************************************************
நவம்பர் 25, திங்கட்கிழமை. சதுர்த்தசி. கார்த்திகை இரண்டாவது சோம வாரம். கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
**************************************************************************************
நவம்பர் 26, செவ்வாய்க்கிழமை. அமாவாசை. சர்வ அமாவாசை. ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
******************************************************************************************
நவம்பர் 27, புதன்கிழமை. பிரதமை. இஷ்டி. சாந்த்ரமான மார்கசிர மாத ஆரம்பம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை. மதுரை தெற்குவாசல் முகையதீன் ஆண்டவர் கொடியேற்றம்.
**********************************************************************************************************
நவம்பர் 28, வியாழக்கிழமை. துவிதியை. சென்னை பைராகிமடம் தாயார் கருடசேவை. திருச்சானூர் பத்மாவதி தாயார் கருடசேவை சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
***********************************************************
நவம்பர் 29, வெள்ளிக்கிழமை. திருதியை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
*****************************************************************
நவம்பர் 30, சனிக்கிழமை. சதுர்த்தி சுக்ல பட்ச சதுர்த்தி. திருச்சானூர் பத்மாவதி தாயார் ரதோத்ஸவம். தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம்.
****************************************************************
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT