Published : 19 Nov 2019 10:02 AM
Last Updated : 19 Nov 2019 10:02 AM

கஷ்டங்கள் தீர்க்கும் அஷ்டமி இன்று!  எதிர்ப்பை விரட்டுவார் காலபைரவர்

வி.ராம்ஜி


தேய்பிறை அஷ்டமியில் பைரவரைத் தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், நம் வாழ்வில் உள்ள எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாக்கி அருள்வார் பைரவர். இன்று தேய்பிறை அஷ்டமி (19.11.19). .


கலியுகத்துக்கு காலபைரவர் என்பார்கள். இந்தக் கலியுகத்தில், மனதில் பயம், மனக்குழப்பம் என்றெல்லாம் தவித்து மருகிக் கொண்டிருக்கிறோம். இப்படியான சூழலில், தேய்பிறை அஷ்டமியில்... காலபைரவரை வழிபட்டால், நம் கவலைகளையெல்லாம் தீர்த்து வைப்பார் என்கிறார்கள் பக்தர்கள். இன்று 19-ம் தேதி செவ்வாய்க்கிழமை அஷ்டமி. தேய்பிறை அஷ்டமி. .

சிவாலயங்களில், பிராகாரத்தைச் சுற்றி வரும் போது, காலபைரவருக்கு தனிச்சந்நிதி அமைந்திருக்கும். தேய்பிறை அஷ்டமி, பைரவருக்கு உகந்த நாள். இந்த நாளில், காலையிலும் மாலையிலும் பைரவருக்கு அபிஷேகங்கள், அலங்காரங்கள், ஆராதனைகள் விமரிசையாக நடைபெறும்.

இன்னும் சில ஆலயங்களில், ராகுகாலவேளையில், தேய்பிறை அஷ்டமியின் போது பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது பைரவரை தரிசிப்பது கூடுதல் விசேஷம்.


அன்றைய நாளில், ராகுகாலவேளையில் தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொள்வது கூடுதல் பலம். எனவே அஷ்டமியில் பைரவரை தரிசித்து உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். பக்கத்துணையாக இருந்து காத்தருள்வார் பைரவர்.


இன்று 19ம் தேதி கார்த்திகைச் செவ்வாய். இந்தநாளில்... தேய்பிறை அஷ்டமியும் வந்துள்ளது. . அவருக்கு உரிய நன்னாளில், பைரவரை வணங்கிட பயமெல்லாம் விலகிடும். இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வணங்கி வழிபடுவது, மிகுந்த பலன்களை வாரி வழங்கும் என்கிறார்கள்.


மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும்; எதிர்ப்புகள் தவிடுபொடியாகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x