

வி.ராம்ஜி
முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய கார்த்திகை விரத நாள் இன்று (13.11.19). கார்த்திகை விரத நாளில், முருகப்பெருமானை வழிபடுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, மனதார பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட மங்கல காரியங்கள் நடந்தேறும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
மாதந்தோறும் வருகிற கார்த்திகை விரத நாள், முருகனுக்கு உரிய அற்புதமான நாள். முருக பக்தர்கள் பலரும், இந்தநாளில் விரதமிருந்து முருகக் கடவுளை வணங்குவார்கள். வளம் பெறுவார்கள்.
ஐப்பசி மாதத்தின் நிறைவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில்... இன்றைய தினம் 13.11.19 புதன்கிழமை கார்த்திகை விரத நாள். எனவே, முருகப்பெருமானை நினைத்து பாராயணம் செய்யுங்கள். கந்த சஷ்டி கவசம் படியுங்கள். அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். அல்லது அருகில் உள்ள சிவாலயத்தின் முருகப் பெருமான் சந்நிதிக்கும் சென்று வழிபடலாம். இதனால், மிகுந்த பலன்களைத் தந்தருள்வார் கந்தகுமாரன். .
முருகக் கடவுளுக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல், கேசரி அல்லது எலுமிச்சை சாதம் அல்லது பால் பாயசம் நைவேத்தியம் செய்து, விநியோகியுங்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியைத் தருவார் வேலவன்.