Published : 20 Oct 2019 04:43 PM
Last Updated : 20 Oct 2019 04:43 PM

தீபாவளிக்கு முதல் நாள்... யம தீபம்!

வி.ராம்ஜி

தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றச் சொல்கிறது சம்பிரதாயம்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்.

சொத்துகள் சேரும். அனைத்துவிதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.

புரட்டாசி மஹாளய பட்சத்தில் பூலோகத்துக்கு நம் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு மஹாளய அமாவாசை அன்று நாம் திதி கொடுத்து இருப்போம்.

அப்படி வந்த அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது “யம தீபம்” மட்டுமே. அந்தத் தீபத்தை தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியன்று ஏற்ற வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும்.

யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

இன்னொரு முக்கியமான விஷயம்... யம தீபமானது துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் துர்மரணம் எனும் நிலையில் இருந்து விலகும். உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். வம்சத்தை வாழச் செய்வார்கள்.

யம தீபம் ஏற்றும் முறை:

உங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். அப்படி இடவசதி இல்லை எனில் வீட்டிற்குள்ளும் ஏற்றலாம்.

விளக்கேற்றும் போது, தெற்கு திசை நோக்கி விளக்கு எரிவது போல் இருக்க வேண்டும்.

விளக்கேற்றிய பிறகு, உங்கள் முன்னோரையும் மனதில் ஓரிரு நிமிடங்கள் பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்.

பின்னர்,

ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய

ம்ருத்யவே சாந்த காயச

வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச

ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!

வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:

சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:

எனும் ஸ்லோகத்தைச்சொல்லுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x