விக்கிரகங்கள் தங்கம், வெள்ளி, தாமிரம், மண், கல், மரம் ஆகியவற்றால் செய்யப் பெறலாம்.
தெய்வப்படிமங்கள் செய்வதற்குரிய மரங்கள்: தேவதாரு, சந்தனம், வில்வம், மா, பலா, சிவப்பு, சந்தன மரம் ஆகியவை.
சூரிய விக்கிரகம் செய்வதற்குரிய விதிகள் என்னென்ன?
விக்கிரகம் 84 அங்குல உயரமும், முகம் 12 அங்குல நீளமும் இருக்க வேண்டும். முகத்தில் மூன்றில் ஒருபங்கு தாடை அமைக்க வேண்டும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கில் மூக்கும் நெற்றியும் அமைக்கப்பட வேண்டும்.
கண்கள் இரண்டு அங்குல நீளமும் ஒரு அங்குல விழித்திரையும் உடையதாக இருக்க வேண்டும். விழித்திரையில் மூன்றில் ஒருபங்கு அளவு கருவிழி அமைக்கப் பெறவேண்டும்.
கை, கால், முன்னங்கைகள், தொடைகள் சம அளவாக இருக்கவேண்டும். பாதம் ஆறு அங்குல நீளமும் நான்கு அங்குல அகலமும் கொண்டிருக்க வேண்டும். மார்பு, தொடை, கண்புருவம், நெற்றி, மூக்கு, கன்னம் ஆகியவை சற்றுத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும்.

கண்கள் பெரியவையாகவும், உதடுகள் சிவப்பாகவும், முகம் தாமரை மலர் போன்றும் இருக்க வேண்டும்.
விக்கிரகத்தில் ஆபரணங்கள், காதணிகள், பூணூல், மாலைகள், கிரீடம் ஆகியவை அணியப்பெற வேண்டும்.
கைகளில் தாமரை மலரும், பொன்னாலான மணிமாலையும் இருக்க வேண்டும்.
பவிஷய புராணம், சுவாமி சிவராம்ஜி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 32 பி, கிருஷ்ணா தெரு,
பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17, விலை: ரூ.45/-
தொலைபேசி: 044- 24331510