

நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா இன்று (ஆக.29) கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. செப்.7-ம் தேதி பெரிய தேர் பவனி நடைபெற உள்ளது.
நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று (ஆக.29) மாலை கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5.45 மணி அளவில் பேராலய முகப்பில் இருந்து கொடி ஊர் பவனி தொடங்கி கடற்கரை சாலை, ஆரிய நாட்டுத் தெரு, திராவிடர் உணவகம் வழியாக மீண்டும் பேராலய முகப்பை வந்தடையும்.
பின்னர் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளர் கொடியை புனிதம் செய்துவைக்க கொடியேற்றம் நடை பெறும். கொடியேற்றப்பட்ட அடுத்த நிமிடம் வாணவேடிக்கை நடைபெ றும். பேராலய கோபுரங்களில் பல வண்ண மின் விளக்குகள் எரிய விடப்படும்.
இதைத்தொடர்ந்து பேராலயத் தில் தமிழிலும், பேராலய கீழ் கோயிலில் தமிழ், ஆங்கிலம், மராத்தியிலும், விண்மீன் கோயி லில் மராத்தி, மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்திலும் திருப்பலி நடைபெறும். நாளை (ஆக.30) புனிதப்பாதையில் சிலுவைப் பாதையும், ஆக.31-ம் தேதி ஜெப மாலையும் நடைபெறும்.
வரும் செப்.7-ம் தேதி மாலை 5.15 மணியளவில் பேராலய கலையரங் கத்தில் கோட்டார் மறை மாவட்ட | ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலியும், இரவு 7.30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனியும் நடைபெறும்.
செப்.8-ல் மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு விண்மீன் கோயி லில் சிறப்புக் கூட்டுத் திருப்பலியும், அன்று மாலை 6 மணிக்கு கொடி இயிக்கமும் நடைபெறும். விழா ஏற் பாடுகளை பேராலய அதிபர் பிர பாகரன் தலைமையில் உதவி பங்கு தந்தைகள் செய்து வருகின்றனர்.