Published : 25 Aug 2019 10:16 AM
Last Updated : 25 Aug 2019 10:16 AM

வாரியார் பிறந்தநாளில்... அவரின் பொன்மொழிகள்

வி.ராம்ஜி


திருமுருக வாரியார் சுவாமிகளின் பிறந்ததினம் இன்று (25.8.19). இந்த இனிய நாளில் அவரது பொன்மொழிகளை ஏற்று நடப்போம்.


* துன்பம் இல்லாமல் இன்பமாக வாழ விரும்பினால், மனதால் கூட அடுத்தவருக்கு தீங்கு நினைக்கக் கூடாது.


* சிறியவர் என்று யாரையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. உயர்ந்த அரிசி, எளிய உமியைக் கொண்டே, சாதாரண மண்ணில் முளை விடுகிறது.


* ஆரோக்கியமான வாழ்க்கைதான், மனிதனுக்கு மிகப்பெரிய பாக்கியம்.


* நன்மக்களை உடையவனே பரிபூரணன்.


* மனதை அடக்கி வைப்பதுதான் உலகின் கஷ்டமான காரியம்.


* யாரிடமும் எதையும் கேட்காதிருப்பதுதான் தானம்.


* நம்மை பாவம் செய்யாமல் தடுப்பவன் எவனோ அவனே நண்பன்.


* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்கு பயிர்களை திருப்பித் தருகின்றன. அதேபோல, ஒருவர் செய்யும் நன்மையும் தீமையும் அவர்கள் செய்ததற்கு ஏற்ற வகையில், பல மடங்காகப் பெருகி, அவரிடமே திரும்ப வந்துசேரும்.


* ஏதாவது ஒரு வீட்டைப் பாருங்க. எவ்ளோ பெரிய வீடா இருந்தாலும் கதவு இவ்வளவுதான். எவ்ளோ பெரிய கதவா இருந்தாலும் பூட்டு இவ்வளவுதான். எவ்ளோ பெரிய பூட்டா இருந்தாலும் சாவி இவ்வளவுதான். இத்துனூண்டு சாவியை வைச்சு, அவ்ளோ பெரிய வீட்டைத் திறக்கிறோம். வாழ்க்கையும் இதே மாதிரிதான். எவ்ளோ பெரிய பிரச்சினையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ சிறிய தீர்மானமோ போதும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x