ஆவணி சஷ்டியில் வெற்றிவேலன் தரிசனம்

ஆவணி சஷ்டியில் வெற்றிவேலன் தரிசனம்
Updated on
1 min read



ஆவணி சஷ்டியில் வெற்றிவேலனை தரிசனம் செய்யுங்கள். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வடிவேலன். 21.8.19 புதன்கிழமை சஷ்டி.
மாதந்தோறும் சஷ்டி திதியன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபடுவதும் ரொம்பவே விசேஷம். மாத சஷ்டியில் விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், கந்த சஷ்டியின் போது விரதம் இருப்பார்கள்.


மேலும் மாத சஷ்டியின் போது, வீட்டில் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி, முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் சூட்டி, சஷ்டி கவசம் பாராயணம் செய்து வேண்டிக்கொள்ளலாம்.


எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபடலாம். மேலும் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு விநியோகிக்கலாம். இன்னும் முடிந்தால், நான்குபேருக்கேனும் உணவுப்பொட்டலம் வழங்குங்கள். உங்கள் வீட்டில் இருந்த தரித்திர நிலையையே மாற்றி அருளுவார் மயில்வாகனன்.


முருகன் கோயிலுக்குச் செல்லுங்கள். சஷ்டியில், முருகப்பெருமானுக்கு குளிரக்குளிர அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதை கண்குளிர தரிசியுங்கள். முடிந்தால், அபிஷேகப் பொருட்களை வழங்குங்கள். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குங்கள். வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள். எதிர்ப்புகள் தவிடுபொடியாகும்.


இல்லத்திலும் உள்ளத்திலும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் குடியமர்த்தி அருளுவான் திருக்குமரன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in