Published : 18 Aug 2019 07:46 AM
Last Updated : 18 Aug 2019 07:46 AM

அத்திவரதர் வைபவம் இனிதே நிறைவு; 48 வகையான பலகாரங்கள் நைவேத்யம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத் தில் நேற்று ரோஜா நிறப் பட்டாடை யில் அத்திவரதர் காட்சி அளித்தார். அவருக்கு 48 வகையான பலகாரங்கள் நைவேத்யம் செய்யப்பட்டு வைபவம் நிறைவுற்றது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் 48 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த 1979-ம் ஆண்டுக்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த வைபவத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்க்ள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

கடந்த 47 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் வைபவத்தில் நேற்று முன்தினத்துடன் பொதுமக்கள் தரிசனம் நிறைவு பெற்றது. இந்த தரிசன நிகழ்வில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் கிழக்கு கோபுரம் கதவு அடைக்கப்பட்டு அதிகாலை 2.30 மணி வரை பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

நிறைவு நாளான நேற்று ரோஜா நிறப் பட்டாடையில் அத்திவரதர் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். அவரை கோயிலில் உள்ள பட்டர்கள், ஸ்தானிகர் களும், காவல் பணியில் ஈடுபட் டிருந்த காவலர்கள் நூற்றுக்கணக் கானோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இந்த விழாவின் நிறைவாக நேற்று மாலை தரிசன நேரத்தில் அத்திவர தருக்கு 48 வகையான பலகாரங்களு டன் நைவேத்யமும் ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பட்டர்கள், ஸ்தானி கர்கள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த படையல் நிகழ்வுகள் முடிந்து வரதராஜப் பெருமாள் கோயில் உற்சவர் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேத கோஷங்கள் முழங்க, உற்சவர் அத்திவரதரை தரிசனம் செய்தார். இத்துடன் இந்த அத்தி வரதர் வைபவ நிகழ்ச்சிகள் நிறை வுற்றன.

இதைத் தொடர்ந்து அத்திவரதர் அனந்த சரஸ் குளத்தில் சயனிக்க தயாரானார். அவரை 40 ஆண்டுகள் கழித்துதான் பொதுமக்கள் தரிசனத்துக்கு வெளியே எடுப்பர்.

அதுவரை அத்திவரதரை மனதால் மட்டுமே தரிசிக்க முடியும். கண்களால் தரிசிக்க முடியாது என்ற எண்ணங்களுடன் வைபவ நிறைவு நாளில் பக்தர்கள் கணத்த இதயத்துடன் கலைந்து சென்றனர்.

அத்திவரதரை தரிசித்த உற்சவர் வரதராஜப் பெருமாள்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்நிலையில 48-வது நாளான நேற்று அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயனிப்பதற்கான பணிகள் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அத்திவரதருக்கு 48 பட்சணங்கள் வைத்து அர்ச்சகர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து உற்சவர் வரதராஜப் பெருமாள் அத்திவரதரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், மலர் அலங்காரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் உற்சவர் வரதராஜப் பெருமாள் கண்ணாடி மாளிகையில் இருந்து புறப்பட்டுச் சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்த அத்திவரதரை தரிசித்தார். பின்னர், கோயில் வளாகத்தை சுற்றி வந்த உற்சவர் மீண்டும் கண்ணாடி மாளிகையை அடைந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x