Published : 11 Aug 2019 11:08 AM
Last Updated : 11 Aug 2019 11:08 AM

ஆடியில்... கூழ்... ஏன்? கூழ் செய்வது இப்படித்தான்!


கோடை காலமெல்லாம் முடிந்து காற்றடிக்கும் காலம் என்று ஆடியைச் சொல்லுவார்கள். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் என்பது பழமொழி.

உடற்சூட்டைத் தணிக்கும் விதமாக, கூழ் செய்து, அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்குக் கொடுத்து வருவது, தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம்.

இதோ.. உடலையும் மனதையும் குளிர்விக்கும் கூழ் எப்படிச் செய்வது தெரியுமா?

தேவையான பொருட்கள் :


ராகி மாவு - 1 கப்

தண்ணீர் - 5 கப்

சின்ன வெங்காயம் - 5

தயிர் - 1 கப்

மோர் மிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை :

நல்ல அகலமான பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து, கட்டி சேராமல் கரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து கரண்டியால் நன்கு கிளறுங்கள்.

கெட்டியாகும் பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். பிறகு சிறிது ஆறியதும் அதில் சிறிய வெங்காயத்தையும் தயிரையும் சேர்த்து நன்றாகக் கரைக்க வேண்டும்.

அடுத்து, வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மோர் மிளகாயைப் போட்டு பொன்னிறமாக பொறித்துக் கொள்ளவேண்டும். கரைத்து வைத்துள்ள கூழில் சேர்த்து நன்கு கிளறிவிடவும். ஒரு ஐந்து நிமிடம் கழித்து, பரிமாறலாம்.

இப்போது, சுவையான, ஆரோக்கியமான, அருமையான கூழ் தயார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x