

வி.ராம்ஜி
இந்த வாரத்தின் விசேஷங்கள், விழாக்கள், விரத நாட்கள்!
ஆகஸ்ட் 11 ஆடி 26. ஞாயிற்றுக்கிழமை. சர்வ ஏகாதசி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் ரதோத்ஸவம். சுக்லபட்ச சர்வ ஏகாதசி. மயிலாடுதுறை ஸ்ரீசியாமளாதேவி புஷ்பாஞ்சலி. ஆடி உத்ஸவம். பழநி லட்சார்ச்சனை, ஹோமம்.
ஆகஸ்ட் 12, ஆடி 27, திங்கட்கிழமை. துவாதசி. இருக்கன்குடி மாரியம்மன் சப்தாவரணம்.
சுக்ல பட்ச மகா பிரதோஷம். சோம வார பிரதோஷம்.
ஆகஸ்ட் 13, ஆடி 28. செவ்வாய்க்கிழமை. திரயோதசி. வடமதுரை ஸ்ரீசெளந்திரராஜ பெருமாள் திருக்கல்யாணம், வைபவம். குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. பட்டினத்தார், வேளூர் ஸ்ரீதுர்காம்பிகை புஷ்பாஞ்சலி, ஸ்ரீரங்கம் ஆடிப்பெருக்கு.
ஆகஸ்ட் 14, ஆடி 29, புதன்கிழமை. பெளர்ணமி. திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவித்ரோத்ஸவம். ரிஷப வாகன சேவை. இருக்கன்குடி மாரியம்மன் திருவீதியுலா. பெளர்ணமி திருவோண விரதம்.
ஆகஸ்ட் 15, ஆடி 30. வியாழக்கிழமை. ஆவணி அவிட்டம். ருக், யஜூர் உபாகர்மா. ஹயக்ரீவ ஜயந்தி. ரக்ஷாபந்தனம். திருப்பனந்தாள் ஸ்ரீவீரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை. வேளூர் முத்துக்குமாரசுவாமி மாகேஸ்வர பூஜை. காஞ்சி தேவராஜ சுவாமி ஆடி கருடன்.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அருணகிரிநாதர் விழா.
ஆகஸ்ட் 16, ஆடி 31, வெள்ளிக்கிழமை. துவிதியை. ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை. அம்மன் கோயில்களில் சிறப்பு ஆராதனைகள். காயத்ரி ஜபம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சப்தாவரணம். அவிநாசி கருணாம்பிகை அம்பாளுக்கு விசேஷ வழிபாடுகள், பூஜைகள். ஊஞ்சல் உத்ஸவம்.பழநி பெரியநாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம். வெள்ளித்தேர் பவனி.
ஆகஸ்ட் 17, ஆடி 32. சனிக்கிழமை. திருதியை. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு. வடமதுரை செளந்திரராஜ பெருமாள் வசந்த உத்ஸவம்.