

வி.ராம்ஜி
பாயசம்... யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும் பால் பாயசம், எல்லோருக்கும் இஷ்டமானது. வரலட்சுமி விரத நாளில், மகாலட்சுமிக்கு பல இனிப்பு வகைகளைப் படைத்தாலும் பால் பாயசம் நைவேத்தியம் செய்து வழிபடுவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது.
சரி... பால் பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள் :
பால் - அரை லிட்டர்
சேமியா - 200 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - தேவையான அளவு
முந்திரிப்பருப்பு - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு
ஏலக்காய்த் தூள் _ சிறிதளவு
முதலில், வாணலியில் நெய்விட்டு, முந்திரியையும் திராட்சையையும் விட்டு நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
பிறகு அவற்றை எடுத்துவிட்டு, அதே நெய்யில், சேமியாவை நன்றாக வறுக்கவேண்டும்.
இதன் பின்னர், பாலை நன்றாகக் கொதிக்கவிடவேண்டும். பாலில் தண்ணீரை துளியும் சேர்க்காமல் இருப்பதே சுவையைக் கூட்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.