

வி.ராம்ஜி
வரலட்சுமி விரத நாளில், மகாலட்சுமிக்கு பலவிதமான நைவேத்தியங்கள் செய்து வேண்டிக்கொள்ளலாம். அதில், முக்கியமானது... வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்.
தேவையான பொருட்கள் :
மஞ்சள் தூள் : கால் டீஸ்பூன்
கொண்டைக்கடலை - ஒரு கப் (இதை நன்றாக ஊறைவைத்து, கொஞ்சமாக உப்பு போட்டு வேகவைத்துக்கொள்ளுங்கள்).
உப்பு : தேவையான அளவு
தேங்காய் துருவல் : இரண்டு டீஸ்பூன்
அடுத்து,
ஜீரகம் - ஒரு டீஸ்பூன்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - இரண்டு
கடலைப்பருப்பு : இரண்டு டீஸ்பூன்
இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
தனியா - ஒரு டீஸ்பூன்
இதன் பிறகு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - இரண்டு
இப்படித்தான் செய்யணும்:
அடுப்பில் கடாயை ஏற்றி, அதில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய வையுங்கள். கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை இட்டு நன்றாகத் தாளிக்கவும். பிறகு, அதில் வேக வைத்த வெள்ளை கொண்டைக்கடலை, மஞ்சள் தூள், உப்பு, தேங்காய் துருவல் சேருங்கள். மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் வரை நன்றாகக் கிளறுங்கள்.
அடுத்து, பொடி சேர்த்து கிளறி, இரண்டு அல்லது மூன்று நிமிடத்தில் இறக்கினால், சுடச்சுட, மணக்க மணக்க வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் ரெடி!