Published : 06 Aug 2019 09:44 AM
Last Updated : 06 Aug 2019 09:44 AM

கஷ்டமெல்லாம் தீர்ப்பான் கந்தவேலன் - இன்று சஷ்டி மறக்காதீங்க! 

வி.ராம்ஜி


சஷ்டி விசேஷம். அதிலும் ஆடி மாத சஷ்டி அற்புதமான நன்னாள். இன்னும் சிறப்பு இந்தமுறை அமைந்துள்ளது.  இந்த முறை இன்றைய தினம் 6.8.19 செவ்வாய்க்கிழமையன்று சஷ்டி வந்துள்ளது. அதாவது, கடந்த சஷ்டியும் ஆடி செவ்வாய்க்கிழமையில்தான்  வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  இன்று 6.8.19ம் தேதி சஷ்டி. முருகனுக்கு உரிய நன்னாள். இந்தநாளில், கந்தபெருமானை வழிபடுவோம். கவலைகளையெல்லாம் தீர்த்துவைப்பான் கந்தகுமாரன்! 
பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான வழிபாட்டுக்கு உரிய நாள். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில், முருகப்பெருமானுக்கு விரதம் இருப்பார்கள் பக்தர்கள். சஷ்டி கவசம் பாராயணம் செய்து முருகனைப் போற்றுவார்கள். 
அதேபோல் செவ்வாய்க்கிழமை என்பதும் கந்தனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள். செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் இணைந்து வருவது மேலும் சிறப்பு. அதுமட்டுமா? ஆடிச் செவ்வாய் ரொம்பவே விசேஷம். 
ஆடி மாதத்தில், செவ்வாய்க்கிழமையும் சஷ்டியும் ஒருசேர வந்திருக்கிறது. இன்று ஆடிச் செவ்வாய், சஷ்டி. இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது விசேஷம்.
விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள், வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்யுங்கள். கந்தசஷ்டி கவசம் படியுங்கள். எதிர்ப்புகள் விலகும். கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும். வேண்டியது அனைத்தையும் தந்தருள்வான் வேலவன். 
இன்னும் இயலுமெனில், இந்த சஷ்டி நாளில், நான்குபேருக்கேனும் எலுமிச்சை சாதம்  அல்லது தயிர்சாதப் பொட்டலம் வழங்குங்கள். நமக்கு வந்த தடைகளையெல்லாம் தகர்த்துவிடுவான் வேலவன். கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் எதிர்ப்புகளையும் விரட்டி அருள்வான் முருகப்பெருமான்! 
 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x