Published : 04 Aug 2019 11:51 AM
Last Updated : 04 Aug 2019 11:51 AM

இந்த வார விசேஷங்கள்! 

வி.ராம்ஜி


ஆகஸ்ட் 4, ஆடி 19. ஞாயிற்றுக்கிழமை. ஆடிப்பூரம். ஆண்டாள் அவதரித்த தினம். சதுர்த்தி விரதம். நாக சதுர்த்தி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர் பவனி. சங்கரன் கோவில் கோமதி அன்னை காமதேனு வாகனத்தில் பவனி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தனி தபசு மண்டபம் எழுந்தருளல். சுவாமி தங்க ரிஷப வாகன சேவை. மன்னார்குடி செங்கமலத் தாயார் தேர். பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் குருபூஜை.


ஆகஸ்ட் 5, ஆடி 20. திங்கட்கிழமை. கருட பஞ்சமி. சங்கரன்கோவில் கோமதி அன்னை சிம்ம வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் வெட்டிவேர் சப்பர பவனி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தனி, திருவாடானை சிநேகவல்லி, நயினார்கோவில் செளந்தரநாயகி திருக்கல்யாணம். மதுரை மீனாட்சி அன்னை ரிஷப சேவை. 


ஆகஸ்ட் 6, ஆடி 21. செவ்வாய்க்கிழமை. சஷ்டி விரதம். சங்கரன்கோவில் கோமதி அன்னை ரிஷப வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் தோளுக்கினியானில் தீர்த்தவாரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு. ராமேஸ்வரம் பர்வதவர்த்தனி, திருவாடானை சிநேகவல்லி , நயினார்கோவில் செளந்தரநாயகி ஊஞ்சல் சேவை. 


ஆகஸ்ட் 7, ஆடி 22. புதன்கிழமை. ஆடி சுவாதி. சேரமான் நாயனார், சுந்தரர் பெருமான் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதி அன்னை வெள்ளி சப்பர வீதியுலா. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பொங்கல் விழா. மதுரை மீனாட்சி அன்னை புஷ்ப பல்லக்கு சேவை. அழகர்கோவில் கள்ளழகர் ஆடித்திருவிழா ஆரம்பம்.


ஆகஸ்ட் 8, ஆடி 23. வியாழக்கிழமை. சங்கரன்கோவில் கோமதி அன்னை கனக தண்டியல். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் தேர் எழுந்தருளல். அழகர்கோவில் கள்ளழகர் கிருஷ்ணாவதாரம். சிம்மவாகனத்தில் பவனி. மதுரை மீனாட்சி அன்னை குதிரை வாகன சேவை. ராமேஸ்வரம் பர்வதவர்த்தனி மஞ்சள் நீராட்டு வைபவம். ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா. 


ஆகஸ்ட் 9, ஆடி 24. வெள்ளிக்கிழமை. வரலட்சுமி விரதம். சங்கரன்கோவில் கோமதி அன்னை பூப்பல்லக்கு. மதுரை மீனாட்சி அன்னை சட்டத்தேர் பவனி. ராமேஸ்வரம் சிவனார் நந்திகேஸ்வரர் வாகனம். அம்பாள் பர்வத வர்த்தனி வெள்ளி யானை வாகன வீதியுலா. இருக்கன்குடி மாரியம்மன் உத்ஸவம் தொடக்கம். படவேடு ரேணுகாதேவி புறப்பாடு. அழகர்கோவில் கள்ளழகர் அனுமார் வாகனத்தில் ஸ்ரீராமர் கோல தரிசனம். 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x