

இந்த வாரத்தின் விசேஷங்கள், விழாக்கள், வைபவங்கள், விரதநாட்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வோம்.
ஆடி 8, ஜூலை 24, புதன்கிழமை. அஷ்டமி. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு கண்டருளல். தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் பவனி.
ஆடி 9, ஜூலை 25, வியாழக்கிழமை. நவமி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் திருக்குளம் வலம் வருதல். வேளூர், சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு, திருச்சி மலைக்கோட்டை, மதுரை, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் ஆகிய சிவாலயங்களில் அம்பாளுக்கு ஆடிப்பூர உத்ஸவ ஆரம்பம்.
ஆடி 10, ஜூலை 26, வெள்ளிக்கிழமை. தசமி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் பரணி உத்ஸவம். படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு கண்டருளல். ஆடிக்கிருத்திகை. தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் விசேஷ பூஜை.
ஆடி 11, ஜூலை 27, சனிக்கிழமை. ஏகாதசி. கிருத்திகை விரதம். வாஸ்து புருஷன் நித்திரை விட்டெழுதல்.
ஆடி 12, ஜூலை 28, ஞாயிற்றுக்கிழமை. சர்வ ஏகாதசி. துவாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் சந்திரப் பிரபையிலும் ரங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா. கிருஷ்ண பட்ச சர்வ ஏகாதசி.
ஆடி 13, ஜூலை 29, திங்கட்கிழமை. திரயோதசி. பிரதோஷம். சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீமாரியம்மன் உத்ஸவம் ஆரம்பம். கிருஷ்ண பட்ச ஸோம வாரப் பிரதோஷம். காஞ்சி சங்கர மடத்தில், ஆச்சார்யாள் பிக்ஷாவந்தனம்.
ஆடி 14, ஜூலை 30, செவ்வாய்க்கிழமை. சதுர்த்தசி. மாத சிவராத்திரி. நாகை ஸ்ரீநீலாயதாட்சியம்மன் காலை அன்ன வாகனத்தில் பவனி. கூற்றுவ நாயனார் குருபூஜை. மாத சிவராத்திரி.
ஆடி 15, ஜூலை 31, புதன்கிழமை. சர்வ ஆடி அமாவாசை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் இரவு மின்விளக்கு அலங்கார வெள்ளித்தேரில் பவனி. திருவையாறு தென்கயிலாயத்தில் அப்பருக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுத்தல். நாகை நீலாயதாட்சி அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. ராமேஸ்வரத்தில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள். திருவஹிந்திரபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி மூலவர் பூலங்கி சேவை.