

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதரைக் கடந்த 21 நாட்களில் 28 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த வைபவத்துக்கான ஏற்பாடுகளை கண்காணிக்கவும் பக்தர் களின் வசதிக்காகவும் 9 துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவித்த தாவது:
அத்திவரதர் வைபவத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழக அசின் தலைமைச் செய லர் சண்முகம், டிபிஜி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்து பல்வேறு அறிவுறைகளை வழங்கியுள்ளனர். அதன்படி இந்த வைபவத்துக்கான ஏற்பாடுகளை கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், தோட்டக் கலைத் துறை இயக்குநர் சுப்பையா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் களும் ஆய்வு செய்து பல அறிவுரை களை வழங்கியுள்ளனர்.
அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு கோயில் இடங்களையும் நகரத்தையும் சுகாதாரமாக பரா மரிப்பது, அவர்களுக்கு வழங்க குடிநீர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வது போன்றவற்றுக் காக 16 குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன.
இக்குழுவில் தேவைக்கு தகுந் தாற்போல் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய் துறையினர் இருப்பர். இக்குழுக்கள் கோயி லைச் சுற்றியுள்ள பகுதிகளை 16 பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு பணிபுரிவர்.
பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப் பட்டுள்ளன. குடிநீர் வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதி முழுவதும் மற்றும் வடக்கு மாட வீதியில் குறிப்பிட்ட அளவுக்கும் நிழற்குடை அமைத் துள்ளோம்.
வரிசையில் வரும் பொதுமக்க ளுக்கு கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் நிற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க மணல் கொட்டப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தாற்போல் நாற்காலிகளும் போடப்பட் டுள்ளன.
நீண்ட நேரம் நடந்து வருபவர்கள் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் வரிசையில் வரலாம்.வடக்கு மாட வீதி, ஆழ்வார் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு நீர் மோர், தேநீர், பிஸ்கட் போன்றவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளன என்றார்.
அத்திவரதர் இடமாற்றமா?
அத்திவரதர் இருக்கும் இடத்தை மாற்றுவது குறித்து ஆட்சியரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப் பினர். அதற்கு, ‘‘இந்த விஷயத் தில் ஆகம விதிகளை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியுள் ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிசீலனை செய்து வருகிறார். அதுபோல் தரிசன நேரத்தை முன்கூட்டியே தொடங்க வேண் டும் என்கிற பக்தர்களின் கோரிக் கையையும் அறநிலையத் துறை பரிசீலித்து வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறையினர்தான் இது தொடர்பான முடிவுகளை எடுப்பர். அத்திவதரர் நின்றகோலத்தில் எப்போது தரிச னம் தருவார் என்பது இன்று (செவ் வாய்க்கிழமை) தகவல் தெரிவிக் கப்படும். முதலமைச்சர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்களின் வருகை குறித்து தகவல் ஏதும் இதுவரை இல்லை’’ என்றார்.
முதல்வரிடம் கோரிக்கை
அத்திவரதரை மீண்டும் நீருக்குள் வைக்கக் கூடாது என்று கோரிக்கை வைக்கப்போவதாக ஜீயர் ஒருவர் கூறியுள்ளது குறித்து ஆட்சியரிடம் கேட்டதற்கு, அவர் ‘‘முதல்வரிடம் கோரிக்கை வைத்தால் ஆகமவிதிப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை இந்து சமய அறநிலையத் துறை முதல்வரிடம் கலந்து பேசி இறுதி செய்யும். மாலை 6 மணிக்கு மேல் ரூ.300 கட்டணத்தில் ஆன்-லைனில் முன்பதிவு செய்யும் ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை விரைவில் அதிகரிக் கப்படும்’’.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பதில் அளித்தார்.