

வணக்கம் வாசகர்களே!
’ஜோதிடம் அறிவோம்’ என்ற தொடர் மூலம் ஜோதிடத்தில் விழிப்பு உணர்வு ஏற்படுத்திய, ஏற்படுத்தி வருகிற உங்கள் ஜோதிடர் ஜெயம்.சரவணன் அவர்கள் அங்கம் வகித்துள்ள 'அக்ஷயா ஜோதிட வித்யாலயம்' கடந்த 8 வருடங்களாக 1200க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜோதிடப் பயிற்சியை வழங்கி உள்ளது. இதன் மூலம், அவர்களை தொழில் முறை ஜோதிடர்களாக பரிணமிக்க வைத்துள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது, 'அக்ஷயா ஜோதிட வித்யாலயம்’ சென்னையில் 4 மையங்களில் ஜோதிடக் கல்வியை கற்றுத்தர உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்கெனவே, ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டு, இந்த மையத்தில் ஜோதிடம் பயின்று, ஏராளமான அன்பர்கள், தங்களது உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகச்சிறப்பாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதோ... இப்போது, இந்தப் பயிற்சியின் மூலமாக நீங்களும் ஜோதிடர் ஆகலாம். ஜோதிட சூட்சுமங்களையும், அதன் அற்புத ரகசியங்களையும் அறிந்து ,எதிர்காலம் எப்படி இருக்கும்? அதன் சாதகபாதகங்கள் அறிந்து வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளலாம்; பலரது வாழ்க்கை திசையை மாற்றிக் கொடுக்கலாம் என்பது எல்லோருக்கும் கிடைக்காத சிறப்பான வாய்ப்பு என்பதை நீங்கள் அறிந்து உணருகிறீர்கள்தானே!
இந்த ஜோதிடப் பயிற்சி, அடிப்படை மற்றும் உயர்நிலை என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது.
அடிப்படை வகுப்பில், ஜோதிடத்தின் அடிப்படை அம்சங்களில் ஆரம்பித்து திதி, நட்சத்திரம், யோகம் என்று தொடங்கி லக்னம் முதல் முழு ஜாதகத்தையே கணித்து அதன் பலாபலன்கள் அறிதல் வரை பயிற்சி அளிக்கப்படும்.
அடுத்து... உயர்நிலைப் பயிற்சி வகுப்பில், ஜோதிட சூட்சுமங்கள், திசா புத்தி பலன்கள், பலன்களைக் கண்டு அதை வெளிப்படுத்தும் முறை, திருமணப் பொருத்தம், பரிகாரங்கள், எண்கணிதம், வாஸ்து சாஸ்திரம் மட்டுமின்றி இன்னும் பல அம்சங்கள் கற்றுத்தரப்படும்.