

பெருமாள் கோயிலில் துளசி இலையையும், துளசி தீர்த்தத்தையும் பிரசாதமாகத் தருவார்கள். பெருமாளுக்கு உகந்தது துளசி. அதனால்தான் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் துளசி மாடம் தவறாமல் இருக்கும்.
வீடுகளிலும் துளசி மாடம் வைப்பதால் பல நன்மைகள் உண்டு. துளசி ஒரு மூலிகைச் செடி. ஆதலால் துளசிக் கஷாயம், காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடலை வருத்தும் உபாதைகளுக்குச் சிறந்த மருந்தாகும்.
பெருமாள் கோயிலில் செம்புப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் துளசி இலையினைச் சேர்க்கும்போது, திவ்வியமான தீர்த்தமாகிறது. வீட்டில் துளசி மாடம் இருந்தால் தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.