

ஔவையாரால் அருளப்பட்ட விநாயகர் அகவல். விநாயகர் அகவலை தினமும் பாராயணம் செய்யும்போது நிம்மதியும் இறைவனோடு ஏகாந்தமான நெருக்கமும் உண்டாகும்.
இந்த அகவலில் ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’என்னும் வாசகத்தின் மூலம், கற்பக விநாயகர் என்பது விநாயகப் பெருமானின் திருநாமமாக விளங்கும்.
அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிமையாக வந்து அருள்பவர்.
இறைவனின் திருவருளால் நிகழும் அற்புதமான நிலைதான் அற்புதம்.