Published : 03 May 2014 06:34 PM
Last Updated : 03 May 2014 06:34 PM

நெய்க்குப்பை- பாவ விமோசனம் தரும் தலம்

ஆசைக்கு அடிமையாகாதார் யார்? ஆசை என்பது மனிதனுக்கு மட்டுமே வரக்கூடியது அல்லவே? அது உமையவளுக்கும் வந்தது.

உமையவள் இறைவனை பால் கொண்டு அபிஷேகம் செய்தாள். அவள் அபிஷேகம் செய்த தலம் பந்தநல்லூர் என்று தற்போது அழைக்கப்படும் பந்தனை நல்லூர் ஆகும். அந்தப் பால் அங்கிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் நெய்க்குப்பை தலம் வரை ஓடிவந்து நெய்யாக மாறியது.

பார்வதி தேவி கிணற்றிலிருந்து அந்த நெய்யை எடுத்து இறைவனுக்குப் பூஜை செய்து சாப விமோசனம் பெற்றாள். அவள் பெற்ற சாபம் என்ன?

பார்வதிக்கு ஒருநாள் திடீரென்று பந்து விளையாட ஆவல் ஏற்பட்டது. தனது ஆசையை சிவபெருமானிடம் தெரிவித்தார். நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார். பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடியவில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன் அஸ்தமிக்காது தயங்கி நின்றான். சூரியன் மறையாதது கண்டு சினமுற்ற சிவபெருமான் பந்து விளையாடும் இடத்திற்கு வந்தார். அவரது வருகையால் பந்து ஸ்தம்பித்து அந்தரத்தில் நின்றது. கோபங்கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும் தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார். தேவியைப் பசுவாகக் கடவது என சிவபெருமான் சாபமிட்டதும் தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின்தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி, பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒருநாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள்.

கோயிலின் தீர்த்தம் சூரிய தீர்த்தம் தலவிருட்சம் பவளமல்லி

சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன்தோன்றிய இறைவன், சுயரூபம் பெற்ற தேவியிடம் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்தபின்னர் தன்னை வந்தடைய வேண்டும் என்று ஆணையிட்டார். அன்னை பார்வதி நெய் கொண்டு இறைவனைப் பூஜித்த தலமே நெய்க்குப்பை தலமாகும். அந்த ஆலயமே சுந்தரேசுவரர் கோயிலாகும். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூபம் என்றாகி, பின்னர் மருவி நெய்க்குப்பை என தற்போது அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்குப் பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது. இன்று மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

சிவபெருமானிடம் சாபம் பெற்ற சூரியன், ஆண்டுதோறும் மூன்று நாட்கள் இத்தலத்தில் தனது கிரணங்களால் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றதாகப் புராணங்கள் கூறுகின்றன. மேலும் இங்கு ஆண்டுதோறும் ஆவணி 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் கருவறை இறைவனைப் பூஜை செய்வதைக் காணலாம். கோயிலின் வெளியே வீற்றிருக்கும் வலஞ்சுழி விநாயகர் சூரியபூஜைக்கு இடையூறு ஏற்படாதவாறு சற்றே தள்ளி அமர்ந்து காட்சி தருகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெரும் சிறப்பைப் பெற்றுள்ள இத்தலத்தை ஒருமுறை தரிசனம் செய்வோருக்கு சகல சாப பாவ விமர்சனங்களை இத்தல இறைவன் தந்தருள்வார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்

பார்வதிக்கு ஒருநாள் திடீரென்று பந்து விளையாட ஆவல் ஏற்பட்டது. தனது ஆசையை சிவபெருமானிடம் தெரிவித்தார். நான்கு வேதங்களையும் ஒரு பந்தாக உருவாக்கி பார்வதியிடம் கொடுத்தார். பார்வதி தனது தோழிகளுடன் பந்து விளையாடத் தொடங்கினாள். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. ஆட்டம் முடியவில்லை. ஆதவன் அஸ்தமிக்கும் நேரம் வந்தது. தான் மறைந்தால் அன்னையின் ஆட்டம் தடைபடுமே என்றெண்ணிய சூரியன் அஸ்தமிக்காது தயங்கி நின்றான். சூரியன் மறையாதது கண்டு சினமுற்ற சிவபெருமான் பந்து விளையாடும் இடத்திற்கு வந்தார். அவரது வருகையால் பந்து ஸ்தம்பித்து அந்தரத்தில் நின்றது. கோபங்கொண்ட சிவபெருமான், பார்வதிக்கும் தன் கடமையைச் செய்யத் தவறிய சூரியனுக்கும் சாபமிட்டார். தேவியைப் பசுவாகக் கடவது என சிவபெருமான் சாபமிட்டதும் தேவி தன் தமையன் கேசவன் மாட்டு இடையனாகப் பின்தொடர பூலோகம் வந்தாள். பந்து வந்து விழுந்த கொன்றைக் காட்டில் சுயம்புலிங்கமாக இருந்த புற்றின் மீது பசு உருவில் இருந்த தேவி, பாலைச் சொரிந்து வழிபட்டாள். ஒருநாள் பசுவின் குளம்பு புற்றின் மீது பட, தேவி சுய உருவம் பெற்றாள்.

சாபம் நீங்கப் பெற்ற அன்னையின் முன்தோன்றிய இறைவன், சுயரூபம் பெற்ற தேவியிடம் நெய்யால் பூஜை செய்து பஞ்சாக்னியில் தவம் செய்தபின்னர் தன்னை வந்தடைய வேண்டும் என்று ஆணையிட்டார். அன்னை பார்வதி நெய் கொண்டு இறைவனைப் பூஜித்த தலமே நெய்க்குப்பை தலமாகும். அந்த ஆலயமே சுந்தரேசுவரர் கோயிலாகும். நெய்க்கூபம் என்ற பெயர் கொண்ட இந்தத் தலம் நெய்கூபம் என்றாகி, பின்னர் மருவி நெய்க்குப்பை என தற்போது அழைக்கப்படுகிறது. பார்வதி தேவி கிணற்றில் இருந்து நெய் எடுத்து சுவாமிக்குப் பூஜை செய்து இறைவனுடன் ஐக்கியமான சிறப்புக்குரிய தலம் இது. இன்று மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x