

துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 8-ல் புதனும் சஞ்சரிப்பதால் சங்கடங்களைச் சமாளிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். தியானம், யோகா, இறைவழிபாடு ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான மன நிலை அமையும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். நல்லவர்களின் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு, அவர்களது ஆலோசனைகளின்படி செயல்பட்டால் நலம் பெறலாம். நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியம். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கவே செய்யும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று கூடும். 28-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறினாலும் தன் சொந்த வீட்டில் உலவத் தொடங்குவதால் தந்தை நலம் சீராகும். தான, தர்மப் பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் சிலருக்கு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 26 (பிற்பகல்), 27, 29.
திசைகள்: வடமேற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை.
எண்கள்: 5, 7.
பரிகாரம்:
துர்கா கவசம் படிப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது விசேஷமாகும். 11-ல் உள்ள ராகுவும் நலம் புரிவார். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். புதியவர்கள் அறிமுகமாகி உதவுவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும். கறுப்பு நிறப்பொருட்களால் வருவாய் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். பெண்களால் நலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். சூரியன், செவ்வாய், புதன், சனி, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும்.
மருத்துவச் செலவுகள் கூடும். இடமாற்றம் உண்டாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகிகள், இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். 28-ம் தேதி முதல் புதன் பலம் பெறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 29.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், வான் நீலம்.
எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்:
சனிக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும், 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். புதியவர்களது நட்பு கிடைக்கும். அதனால் அனுகூலமும் உண்டாகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பணப் புழக்கம் சற்று அதிகமாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். பெண்களின் நிலை உயரும்.
வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், கல்வி சம்பந்தமான துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 4-ல் கேதுவும், 7-ல் சூரியன், செவ்வாய் ஆகியோரும் 8-ல் குருவும் இருப்பதால் பிறரிடம் அன்பாகப் பேசிப் பழகுவது நல்லது. கோபம் அடியோடு கூடாது. தாய் நலனில் கவனம் தேவை. சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 26, 27.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம். பச்சை, வெண்மை, கறுப்பு.
எண்கள்: 4, 5, 6, 8.
பரிகாரம்:
விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும். வேத விற்பன்னர்கள், அந்தணர்களுக்கு உதவுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும் செவ்வாயும், 7-ல் குருவும், 10-ல் சனியும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். பணப் புழக்கம் திருப்தி தரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். போட்டிகள், பந்தயங்கள், வழக்குகளில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும்.
இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். 28-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். மாணவர்களது நிலை உயரும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். அரசு உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 26, 27, 29.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 7, 8, 9.
பரிகாரம்:
சக்தியை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் புதன் உலவுவது மட்டுமே சிறப்பு. இதர கிரகங்களின் சஞ்சாரம் கோசாரப்படி சிறப்பாக இல்லாததால் மனதில் ஏதேனும் குழப்பம் குடிகொள்ளும். உடல் ஆரோக்கியம் சீராக இராது. மருத்துவச் செலவுகள் கூடும். குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்ப்பதன் மூலம் உங்கள் மதிப்பைக் காத்துக் கொள்ளமுடியும். பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். பயணத்தின்போது விழிப்புத் தேவை.
எதிலும் அவசரம் வேண்டாம். நிதானமாகச் செயல்படவும். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். விரும்பத் தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். ஜாதக பலம் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 27, 29.
திசை: வடக்கு.
நிறங்கள்: பச்சை.
எண்: 5.
பரிகாரம்:
கணபதி, நவக்கிரக ஜபம், ஹோமம் செய்வது நல்லது. நவக்கிரகங்களுக்குரிய ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடுவதன் மூலமும் சங்கடம் குறையும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், சுக்கிரனும் உலவுவது விசேஷமாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்திகரமாக இருந்துவரும். ஆசிரியர்கள் புகழ் பெறுவார்கள். சூரியன், செவ்வாய், புதன், சனி, ராகு, கேதுவின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்படவே செய்யும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது ஜாக்கிரதையாக இருக்கவும்.
புதியவர்களிடம் விழிப்புடன் பழகினால் ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் தடைப்படும். மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் உள்ளவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. 28-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். மாணவர்களது நிலை உயரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 29.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்:
ராகு, கேது, புதன், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது.