ஆன்மிக வினா: உள்ளங்கையை தரிசிப்பது ஏன்?

ஆன்மிக வினா: உள்ளங்கையை தரிசிப்பது ஏன்?

Published on

ஆன்மிக நெறியில் கடவுளர்களின் திருக்கரங்கள் பெரிதும் போற்றப்படுபவை. கருணையைப் பார்வையில் தேக்கி பக்தர்களை நோக்கும் கடவுளரின் திருவுருவங்கள், தங்களின் ஆசியை கரங்களின் வழியாகவே அன்பர்களுக்கு வழங்குவதாக ஐதீகம். இதை வலியுறுத்தும் வகையிலேயே

“கராக்ரே வஸதே லக்ஷ்மீ

கரமத்யே ஸரஸ்வதி

கரமூலேது கோவிந்த: ப்ரபாதே கரதர்சனம்”

- என்னும் ஸ்லோகம் வழக்கில் உள்ளது.

ஆண்டனை இரு கரம்கூப்பித் தொழுவதற்கும், கரங்களால் மலர் கொய்து இறைப்பணிகள் செய்வதற்கும் உதவும் கைகளே இறைவனின் அருளை முதலில் பெரும் உடலின் பாகம் என்றும் சொல்வர்.

இத்தனை பெருமைக்குரிய நம் உள்ளங்கையில் இறைவன் வாசம் செய்கிறான் என்பதும் பக்தர்களிடையே காலம்காலமாக நிலவிவரும் ஐதீகம். இதன் தொடர்ச்சியே காலையில் கண் விழித்து எழுந்த பின், நம்முடைய உள்ளங்கையில் வாசம் செய்யும் இறைவனை நாம் தரிசிக்கும் செயல்.

இறையுருவங்கள், அபய வரத முத்திரைகளைத் தாங்கிய திருக்கரங்களுடன் காட்சி தரும், இறையுருவத்தின் பெருமையைக் கைகள் வெளிப்படுத்தும். இதனால்தான் கைகளைக் கடவுளுக்கு இணையாகச் குறிப்பிடுகிறது வேதம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in