Last Updated : 07 May, 2015 12:10 PM

 

Published : 07 May 2015 12:10 PM
Last Updated : 07 May 2015 12:10 PM

உபநிடதங்களை உயிர்ப்பித்த முகலாய இளவரசன்

‘வேதங்களின் சாரமே உபநிடதங்கள். எல்லாம் வல்ல பரம்பொருளின் அருள் பெற்ற இப்புனித உபநிடதங்களைக் கற்று உணர்பவன், அழிவற்றவன் ஆகிறான். தளைகளிலிருந்து விடுபடுகிறான். சுதந்திர ஜீவனாகிறான்.’

இவை முகலாய ராஜகுமாரனின் வார்த்தைகள். அவர் பெயர் தாராஷிகோ. பாரதத்தின் பெருமையை உலகறியச் செய்து, மத நல்லிணக்கத்தை வளர்த்த இஸ்லாமியர் அவர்.

ஞானத்தைத் தேடி

மாமன்னன் ஷாஜஹான், மும்தாஜ் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1615-ல் பிறந்தான் தாரா. சிறு வயதிலேயே தாரா, நல்லொழுக்கமும் நற்பண்புகளும் கொண்டு திகழ்ந்தான்.

தாரா, முகலாயர் வழக்கத்துக்கு மாறாக, நதீரா என்ற ஒரே பெண்ணை மனைவியாக ஏற்றான். இறுதிவரை அவளுடன் இல்லறம் நடத்தினான்.

வேதாந்தம் மற்றும் தத்துவ நூல்களில் இருந்த ஆர்வமும், உண்மைப் பொருளை உணர்ந்தறியும் வேட்கையும் பண்டிதர்கள் மற்றும் ஞானிகளை நோக்கி தாராஷு கோவை அழைத்துச் சென்றன. எளிய சீடனாக அவர்களைப் பணிந்து பழம் நூல்களைக் கற்கத் தொடங்கினான். சமஸ்கிருதம் பயின்றான். நான்கு வேதங்களை அறிந்தான். வேத தத்துவங்களின் சாரமான உபநிஷதங்களை உணர்ந்து தேர்ந்தான். பகவத் கீதையையும், இதிகாச, புராண, ஆன்மிகக் கிரந்தங்களையும் கற்றுத் தெளிந்தான்.

பிரம்மம் ஒன்றே

உபநிடதங்கள் அவன் மனதைக் கவர்ந்தன. வேத பண்டிதர்கள், இறை ஞானிகளுடன் இவை பற்றி விவாதித்தான். இகலோக வாழ்க்கைக்கும், பரலோகப் பேறுக்கும் வழிகாட்டும் அதன் அரிய கருத்துக்களில் மூழ்கித் திளைத்தான். ‘பரம்பொருள் எனப்படும் பிரம்மம் ஒன்றே. பேரானந்த சொரூபமான அதை அடைவதுதான், உலக வாழ்க்கையின் குறிக்கோள். மதங்கள், இந்தப் பரம்பொருளை அடைவதற்கான வேறுவேறு மார்கங்கள்தான்’ என்ற உட்பொருள் அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்தது.

உபநிடதங்கள் அவன் மனதைக் கவர்ந்தன. வேத பண்டிதர்கள், இறை ஞானிகளுடன் இவை பற்றி விவாதித்தான். இகலோக வாழ்க்கைக்கும், பரலோகப் பேறுக்கும் வழிகாட்டும் அதன் அரிய கருத்துக்களில் மூழ்கித் திளைத்தான். ‘பரம்பொருள் எனப்படும் பிரம்மம் ஒன்றே. பேரானந்த சொரூபமான அதை அடைவதுதான், உலக வாழ்க்கையின் குறிக்கோள். மதங்கள், இந்தப் பரம்பொருளை அடைவதற்கான வேறுவேறு மார்கங்கள்தான்’ என்ற உட்பொருள் அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்தது.

இஸ்லாமிய வேதமும் உபநிடதமும்

இஸ்லாமிய வேதமான குரானும் இதே கருத்தைத்தான் எடுத்துரைக்கிறது. ஆகவே, இந்து-இஸ்லாமியப் பூசல்கள் அர்த்தமற்றவை என்றும் உணர்ந்தான் அவன். ஆனால் அரசியலில் அவன் நிலை தாழத் தொடங்கியது. தம்பி ஔரங்கசீப், தந்தையிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். ஔரங்கசீப்புக்கு எதிராகப் படைதிரட்டிப் போராட முயன்றார் தாராஷுகோ. ஆனால் அவரால் தம்பியிடம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தாராவின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

பாரசீகத்தில் மொழிபெயர்க்கப்பட்ட உபநிடதம்

தாரா கலங்கவில்லை. தனது குறிக்கோளையும் மறக்கவில்லை. உபநிஷதங்கள், அழியக் கூடாது; அவற்றின் கருத்துகள் நிலைத்திருந்து உலக மக்களுக்குப் பயன்தர வேண்டும் என்று நம்பிய தாரா, அதற்கான தீவிர முயற்சியில் இறங்கினார்.

அப்போது பாரசீக மொழி அரசாங்க மொழியாகவும், உலக அறிஞர்கள் அறிந்த ஒன்றாகவும் இருந்தது. பழம்பெரும் உபநிடதங்கள் 52 ஐ, 1657-ம் ஆண்டு, பாரசீகத்தில் மொழிபெயர்த்தார் தாரா. இந்த அற்புத நூல் ‘சிர்ர் ஏ அக்பர்’ (The Greatest Secret) அதாவது ‘உன்னதமான மறைபொருள்’என்று போற்றப்பட்டது. அடுத்து, ‘பகவத் கீதை’, ‘யோக வாசிஷ்டம்’ போன்ற அரிய நூல்களையும் மொழிமாற்றம் செய்தார்.

தாராவின் இப்பாரசீக உபநிடதம் உலகெங்கும் பரவியது. ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளிலும் எழுதப்பட்டது. பாரதத்தின் பண்டைய ஆன்மிகச் செல்வத்தை உலக அறிஞர்கள் கண்டனர். வியந்தனர். ஆனால், இந்த அற்புதங்களைக் காண, தாரா உயிருடன் இருக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x