Last Updated : 07 May, 2015 12:28 PM

 

Published : 07 May 2015 12:28 PM
Last Updated : 07 May 2015 12:28 PM

நடுக்கம் தீர்த்த பெருமான்

விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை அடுத்து ஈசனின் சரபேச அவதாரம் நிகழ்ந்தது. அதனால் நரசிம்மர், சரபேஸ்வரர் இருவருக்கும் ஒரே நாளில் ஜெயந்தி.

இரண்ய வதத்தின் பொழுது, கோபத்தில் இருந்து விடுபட முடியாமல் தவித்தாராம் நரசிம்மர். அப்போது அங்கிருந்த தேவர்கள் ஏதேனும் செய்து நரசிம்மரின் கோபத்தைத் தணிக்கும்படி ஈசனிடம் கோரினர்.

ஈசன் உடனே அழகிய சரபேசப் பறவை உருவம் கொண்டு தோன்றினார். நரசிம்மரின் கோபம் தணித்தார். தேவர்களின் நடுக்கத்தைப் போக்கியதால் ஈசனுக்கு நடுக்கந்தீர்த்த பெருமான் என்பது காரணத் திருநாமம்.

மனிதன், பறவை, மிருகம் என்ற மூன்றும் கொண்ட விசித்திர உருவம் கொண்டவர் சரபேஸ்வரர். முழுவதும் தங்க நிறத்தில் தோன்றிய இவரது உடல் இரு இறக்கைகளுடன் இணைந்த பறவை உரு. சிம்மக் கால்கள் நான்கு. மனிதக் கைகள் நான்கு. சிம்ம முகம் மற்றும் வால், ஆண் மனித மார்பு.

இதுவரை கண்டிராத இந்த அபூர்வ உருவம் தோன்றிய போது கணம் விசித்திரமாகச் சப்தமிட்டது. இந்த ஒலி இசையைக் கேட்ட நரசிம்மரின் கோபம் தணிந்ததாம்.

சரபேஸ்வரருக்கு சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்கள். கூர்மையான நகங்கள். நாலு புறமும் சுழலும் நாக்கு. காளி, துர்க்கா ஆகியோர் இதன் இறக்கைகள். இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் முறையே பிரத்யங்கரா, சூலினி.

காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை நீக்க பரமசிவன் முதலில் வீரபத்திரரை அனுப்பினாராம். இதற்கு மாறாக நரசிம்மம் வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டது. இந்த நேரத்தில் சிவன் ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புக, சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாற்றம் பெற்றாராம். சரபேஸ்வரர் நரசிம்மரின் கோபத்தை நீக்கி அவரைச் சாந்தபடுத்தியதாகக் காஞ்சி புராணம் தெரிவிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x