இரவில் உறங்காப் புளி

இரவில் உறங்காப் புளி
Updated on
1 min read

சுவாமி நம்மாழ்வார் 16 ஆண்டுகள் தவம் செய்த புளியமரம், ஆழ்வார் திருநகரியின் தல விருட்சமாக உள்ளது. ஸ்ரீலட்மணனின் அவதாரம்போல விளங்குகிறது என்றும் சொல்வார்கள்.

வனவாசத்தின்போது லட்சுமணன் 14 ஆண்டுகள் ஸ்ரீராமரைக் கண் துஞ்சாது காவல் காத்ததைப் போல இம்மரத்தின் இலைகளும் இரவில் உறங்காது அதாவது இலை மூடாது என்கிறார்கள்.

இப்புனித மரத்தின் இலைகள் 36 திவ்ய தேசப் பெருமாளும் அமர்ந்து நம்மாழ்வார் பாசுரம் கேட்ட பெருமை கொண்டதாம்.

இம்மரத்தைக் கண்டு வழிபட்டால் 36 திவ்யதேசப் பெருமாளையும் ஒரு சேர வழிபட்ட பலன் உண்டு என்கிறது தல புராணம். நாதமுனிகளுக்கு நம்மாழ்வார் நாலாயிர திவ்யப் பிரபந்தம் அருளிய இடம் என இங்குள்ள விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in