Published : 28 May 2015 12:23 PM
Last Updated : 28 May 2015 12:23 PM

வார ராசி பலன் 28-05-2015 முதல் 03-06-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். நற்காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். திடீர்ப் பொருள் வரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்து வரும். வார முன்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை. அரசியல், நிர்வாகம், பொறியியல், ரியல் எஸ்டேட் துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். வார நடுப்பகுதியில் மதிப்பு உயரும். மன உற்சாகம் பெருகும். வாரக் கடைசியில் பணப் புழக்கம் அதிகமாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 29, 31, ஜூன் 2.

திசைகள்:

வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்:

மெரூன், பச்சை, இளநீலம், வெண்மை.

எண்கள்:

5, 6, 7.

பரிகாரம்:

ஆதித்ய ஹ்ருதயம், கந்த சஷ்டி கவசம் படிப்பது நல்லது. துர்க்கைக்கு நெய்தீபம் ஏற்றித் தொடர்ந்து வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் ராகுவும் உலவுவது விசேஷமாகும். புதிய அறிமுகம் மூலம் உதவி கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.

வார நடுப்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். வாரக் கடைசியில் மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். லேலைப்பளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். குரு உங்கள் ஜன்ம ராசியைப் பார்ப்பதால் மோசமான நிலை ஏற்படாது.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, ஜூன் 2.

திசைகள்:

தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்:

வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், வான் நீலம்.

எண்கள்:

3, 4, 6.

பரிகாரம்:

சனிப் பிரீதி செய்வது அவசியம். ஏழை, எளியவர்கள், வயோதிகர்களுக்கு உதவவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுக்கும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும். பயண விடுதிகள், பயண ஏற்பாடுகள் செய்வோருக்கெல்லாம் வருவாய் கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

நிர்வாகத்திறமை கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். எரிபொருள், மின்சாரம், தளவாடங்கள் லாபம் தரும். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் சில எண்ணங்கள் ஈடேறும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவதால் கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கலைஞர்களுக்குப் பிரச்சினைகள் விலகும். குடும்பத்தில் அமைதி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31.

திசைகள்:

தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்:

சிவப்பு, புகை நிறம். ஆரஞ்சு, பச்சை.

எண்கள்:

1, 4, 5, 9.

பரிகாரம்:

கேது, குரு, சனிக்கு அர்ச்சனைகள் செய்யவும்

மகரம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 7-ல் குருவும், 11-ல் சனியும் உலவுவதால் தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். நண்பர்களும் உறவினர்களும் கூட்டாளிகளும் அளவோடு உதவுவார்கள். சில இடர்பாடுகளும் அவர்களால் உண்டாகும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் கிடைக்கும்.

அறநிலையப் பணியாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்களின் நிலை உயரும். சமுதாய நல முன்னேற்றப் பணியாளர்களுக்கு வாரப் பின்பகுதியில் பாராட்டுகள் குவியும். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கறுப்பு நிறப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், இரும்பு, எஃகு போன்ற பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். சுரங்கப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, 31, ஜூன் 2.

திசைகள்:

மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்:

நீலம், மெரூன், பொன் நிறம்.

எண்கள்:

3, 7, 8.

பரிகாரம்:

மகாவிஷ்ணு, மகாலட்சுமியை வழிபடவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவதால் நல்ல நண்பர்கள் அமைவார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். வியாபாரிகள், மாணவர்களுக்கு வாய்ப்புகள் கூடிவரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள்.

பெண்களின் நோக்கம் நிறைவேறும். உழைப்பு வீண்போகாது. தொழிலாளர்கள், விவசாயிகளுக்குத் திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே31, ஜூன் 2.

திசைகள்:

தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்:

வெண்மை, நீலம், பச்சை.

எண்கள்:

5, 6, 8.

பரிகாரம்:

ராகு, கேது, குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். துர்க்கை, விநாயகரை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் வலுத்திருக்கிறார். சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். நண்பர்கள் நலம் புரிவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். போட்டிகளில் வெற்றி கிட்டும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும்.

விளையாட்டு, விநோதங்களில் வெற்றி பெறச் சந்தர்ப்பம் உருவாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானத் துறையினர் சுபிட்சம் காண்பார்கள். மகப்பேறு பாக்கியம் கைகூடும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். மனதில் உற்சாகம் பெருகும். திரவப் பொருட்கள் லாபம் தரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்:

மே 28 (பிற்பகல்), 29, ஜூன் 2.

திசைகள்:

தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்:

இளநீலம், ஆரஞ்சு, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்:

1, 3, 6, 9.

பரிகாரம்:

ராகு, கேது, புதனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. திருமாலை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x