சாலிகிராமம் பாலவிநாயகர் கோயிலில் 38-வது ஆண்டு லட்சார்ச்சனை விழா தொடக்கம்

அரசமர சுயம்பு விநாயகர்

அரசமர சுயம்பு விநாயகர்

Updated on
1 min read

சென்னை: சாலிகி​ராமத்​தில் உள்ள ஸ்ரீ பால​வி​நாயகர் கோயி​லில், 38-வது ஆண்டு லட்​சார்ச்​சனை விழா, நேற்று தொடங்​கியது. சென்னை சாலிகிராமம், பரணி காலனி​யில் ஸ்ரீபால விநாயகர் கோயில் அமைந்​துள்​ளது. இக்​கோயி​லில் நேற்று லட்​சார்ச்​சனை விழா தொடங்​கியது.

இவ்​விழா ஜன. 26-ம் தேதி வரை கொண்​டாடப்பட உள்​ளது. இதுதொடர்​பாக கோயில் அறங்​காவலரும், ஸ்ரீ பால​வி​நாயகர் சேவா டிரஸ்ட் தலை​வரு​மான குருஜி சுப்​பிரமணி​யன் கூறிய​தாவது: 1983-ம் ஆண்டு நானும் எனது நண்​பரும் சேர்ந்து விநாயகருக்கு கோயில் கட்​டத் தீர்​மானித்​தோம். ஒரு குடிசை அளவில் கோயில் எழுப்​பி, 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்​சார்ச்​சனை தொடங்​கப்​பட்​டது.

2000-ம் ஆண்டு ராஜ கோபுரம், சுப்​பிரமணி​யர், துர்​கை, லட்​சுமி நாராயணர் விக்​கிரகங்​கள், காஞ்சி மகாஸ்​வாமிக்கு நவீன சிலை உள்​ளிட்​ட​வற்றை பிர​திஷ்டை செய்​தோம்.

ஏகதின லட்​சார்ச்​சனை​யின் 14-ம் ஆண்டு சமயத்​தில் (2002-ம் ஆண்​டு) அரசமரத்​தில் சுயம்​பு​வாக விநாயகர் தோன்​றி​னார். அன்று முதல் ஒவ்​வொரு ஞாயிற்​றுக்​கிழமை​யும் அரசமர சுயம்பு விநாயகருக்கு ராகு​கால திரிசதி அர்ச்​சனை செய்து வரு​கிறோம்.

<div class="paragraphs"><p>குருஜி சுப்​பிரமணியன்</p></div>

குருஜி சுப்​பிரமணியன்

2004-ம் ஆண்டு கோயி​லில் குட​முழுக்கு நடை​பெற்​றது. 38-வது லட்​சார்ச்​சனை விழா ஜன.20-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்​கியது. ஜன. 21-ம் தேதி (ஒரு​நாள் மட்​டும்) மாலை 4.30 மணி அளவில் விஷ்ணு சஹஸ்​ர​நாமம் ஒரு லட்​சம் ஆவர்த்தி நடை​பெறும்.

ஜன.23-ம் தேதி ஸ்ரீஸூக்த ஹோம​மும், ஜன.26-ம் தேதி மேள வாத்​தி​யங்​கள் முழங்க, கரகாட்​டம், மயி​லாட்​டம் உள்​ளிட்ட கலை நிகழ்ச்​சிகளு​டன் ரத உற்​சவ​மும் நடை​பெறும் என்​றார். கூடு​தல் விபரங்​களுக்கு 044-23652017, 9940053464 ஆகிய எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம்.

<div class="paragraphs"><p>அரசமர சுயம்பு விநாயகர்</p></div>
சம்பள பாக்கியை தரும்படி கேட்ட வாகன ஓட்டுநரை சுவற்றில் மோதி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in