சித்ரா பெளர்ணமி: இன்ப நிலவு மலரும் வேளை ஆனந்தம்

சித்ரா பெளர்ணமி: இன்ப நிலவு மலரும் வேளை ஆனந்தம்
Updated on
1 min read

சித்ரா பெளர்ணமி மே 3

மாதம்தோறும் முழு நிலவான பவுர்ணமி சத்திய நாராயணப் பெருமாள் பூஜையாகக் கொண்டாடப்படும். சித்திரை மாதம் வரும் சித்ரா பெளர்ணமி அன்று மேலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை பல மடங்கு நன்மை அளிக்கக்கூடியது என்பது நம்பிக்கை.

சத்ய நாராயண பூஜை

ஸ்ரீ மன் நாராயணனே சத்ய நாராயணன். வாழ்வும் வளமும் மங்காத செல்வமும் பெற சத்ய நாராயண பூஜை செய்யலாம். எளிதான இந்த பூஜையை இல்லத்திலேயே செய்துவிடலாம். அருகில் உள்ள கோயில்களில் இப்பூஜை செய்யப்பட்டால் கலந்து கொண்டு நலம் பெறலாம். பொதுவாக இந்தப் பூஜை செய்யப்படுவதே பதினாறும் பெற்று பெருவாழ்வு அடையத்தான்.

பூஜையை விடியற்காலை செய்வதே நல்லது. ஆனால் சத்திய நாராயண பூஜையை மாலையில் பவுர்ணமி நிலவு எழுந்தபின் தான் செய்வார்கள். சத்ய நாராயணன் படத்தை வைத்து, நெய் விளக்கேற்றி பூஜையைத் தொடங்க வேண்டும். பால் பாயசம், கோதுமை அப்பம், ராவா கேசரி ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.

பூஜை தொடங்குவதற்கு முன்பே கலந்துகொள்பவர்கள் வந்துவிட வேண்டும். பின்னர் இறுதிவரை அங்கேயே இருந்து பிரசாதத்தைப் பெற்று அங்கேயே சிறிது உண்டுவிட்டுப் பின்னர் இல்லத்துக்கும் எடுத்து வரலாம்.

இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால், குடும்பத்தில் கஷ்டங்கள் குறையும், செல்வ வளம் பெருகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தரும் குழந்தைகள் பிறக்கும் என்கிறது கந்த புராண சுலோகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in