Published : 03 Apr 2015 09:52 AM
Last Updated : 03 Apr 2015 09:52 AM

கணினி ஆசிரியர் பணிக்கு நாளை கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:

தமிழகம் முழுவதும் மேல் நிலைப் பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணிபுரிந்து வந்த ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தியதில், தேர்ச்சி பெறாத 652 கணினி ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை யடுத்து, காலியான அந்தப் பணி யிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் மீண்டும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணி ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு நாளை (4-ம் தேதி) அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலு வலர் அலுவலகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது. ஆனால், கலந்தாய்வு மையத் துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வில் தேர்ச்சி பெற்ற தற்கான சான்று, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களையும் கொண்டு வருவது அவசியம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 17 காலிப் பணியிடங்க ளுக்கு 24 பேர் தேர்வு செய்யப் பட்டனர். இதில், 17 பேருக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலும், எஞ்சிய 7 பேருக்கு வெளி மாவட் டத்திலும் பணி வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x