வார ராசி பலன் 26-03-2015 முதல் 01-04-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

வார ராசி பலன் 26-03-2015 முதல் 01-04-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)
Updated on
3 min read

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும், கேதுவும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகளை வெல்லும் சக்தி பிறக்கும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும்.

புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உண்டாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறுகருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வாரப் பின்பகுதியில் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்.1.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 7.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு நலம் கூட்டும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய், 6-ல் உலவுவது சிறப்பாகும். குரு 9-லும் ராகு 11-லும் உலவுவது விசேடமாகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள் உதவி புரிவார்கள். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். போட்டி, பந்தயங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றில் வெற்றி காணலாம்.

இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாதனங்கள், நிலபுலங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் சந்திரன் குருவுடன் கூடி உலவும் நிலை அமைவதால் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு கூடும். பொருளாதார நிலை உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்ரல் 1.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 4, 9.

பரிகாரம்:

விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. செவ்வாய் 5-ல் உலவினாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதாலும், குரு 8-ல் இருந்தாலும் வக்கிர நிலையில் சஞ்சரிப்பதாலும் அனுகூலம் உண்டாகும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகப்பேறு அல்லது மக்களால் அனுகூலம் உண்டாகும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், பயணம், கொரியர், தோல் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தாய் நலனில் அக்கறை தேவை.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்.1.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை, சிவப்பு, புகை நிறம்.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்:

சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும். ஆஞ்சநேயரையும் விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும்.

மகர ராசி வாச்கர்களே

உங்கள் ராசிநாதன் சனி 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பாகும். சூரியன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். கறுப்பு, கருநீல நிறப்பொருட்கள் லாபம் தரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் ஈடேறும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்).

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, மெரூன்.

எண்கள்: 1, 6, 7, 8.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை வழிபடுவது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி கற்க உதவி செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவது சிறப்பு. குடும்ப நலம் சீராகும். வீண்வம்பு குறையும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும்.

வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். பிரச்சினைகள் பெருமளவுக்குக் குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், மாதர்கள், மாணவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். வீர, தீர சாகசங்களில் ஈடுபாடு கூடும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும். முன்பின் தெரியாதவர்களிட்ம் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்.1.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 5-ல் குரு உலவுவது சிறப்பு. செவ்வாய் 2-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திடீர்ப் பணவரவு உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும்.

நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். சூரியன், புதன், கேது ஆகியோர் ஜன்ம ராசியில் இருப்பதால் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 29, 30 (முற்பகல்), ஏப்.1.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: இளநீலம், சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 2, 3, 6, 9.

பரிகாரம்:

சூரியன், புதன், ராகு, கேதுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. நாகரை வழிபடவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in