Last Updated : 19 Mar, 2015 12:44 PM

 

Published : 19 Mar 2015 12:44 PM
Last Updated : 19 Mar 2015 12:44 PM

நவக்கிரகங்களை வலமிருந்து இடமாகச் சுற்றலாமா?

நவக்கிரகங்களை இடமிருந்து வலமாகத்தான் சுற்ற வேண்டும். சில பரிகாரக் காரணங்களுக்காக வேண்டுமானால் வலமிருந்து இடமாகச் சுற்ற வேண்டும் என சிலர் கூறலாம்.

பொதுவாக நவக்கிரகங்களின் தன்மைக்கு ஏற்பச் சுற்றினால்தான் பலன் கிடைக்கும் எனப் பெரியவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன.

அதனால் இந்தக் கிரகங்களை பக்தர்களும் இடமிருந்து வலமாகவே சுற்ற வேண்டும்.

ராகு, கேது ஆகிய கிரகங்கள் வலமிருந்து இடமாகச் சுற்றுபவை. ஆகவே நவக்கிரகங்களைச் சுற்றும்போது கடைசி இரண்டு சுற்றுகளை வலமிருந்து இடமாகச் சுற்ற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x