

மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியன் புதன் ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் மன மகிழ்ச்சி பெருகும். எண்ணங்கள் நிறைவேறும். மக்களால் நலம் உண்டாகும். மகப்பேறு பாக்கியம் உண்டு. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அயல்நாட்டுத் தொடர்புகள் லாபம் தரும். பிற மொழி, மத, இனக்காரர்களால் அனுகூலம் உண்டாகும்.
வாழ்க்கை வசதிகள் பெருகும். கலைஞர்களது நிலை உயரும். தம்பதிகள் உறவு நிலை சீர்படும். எலக்ட்ரானிக் துறையினர் லாபம் அடைவர். வேலைப்பளு அதிகமாகும். உடன்பிறந்தவர்களது நலனில் கவனம் தேவை. பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். உடன்பிறந்தவர்களது நலனில் கவனம் தேவை.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம்.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 9.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 10-ல் சூரியனும் புதனும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை துறையைச் சேர்ந்தவர்கள் அனுகூலம் அடைவார்கள். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.
இயந்திரப்பணிகள் லாபம் தரும். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். வழக்குகளில் வெற்றிகிட்டும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினர் லாபம் அடைவார்கள். மக்கள் நலனில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வாரப்பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 9.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். மனதில் துணிவு பிறக்கும். செயலில் வேகம் கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். இயந்திரப்பணியாளர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். செல்வந்தர்கள் ஆதரவு கிடைக்கும். அலைச்சல் அதிகமானாலும் அதற்கான பயன் கிடைத்துவரும். பொருள்வரவு உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். அறிவாற்றல் பளிச்சிடும். வழக்குகளில் நல்ல திருப்பம் காணலாம். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
பரிகாரம்: துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
எண்கள்: 3, 6, 7, 8, 9.
திசைகள்: வடமேற்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், நீலம், சிவப்பு, பொன் நிறம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 5, 8, 9.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எதிர்பாராத பொருள்சேர்க்கை நிகழும். புதியவர்களது தொடர்பால் அனுகூலம் உண்டு. பயணம் பயன்படும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும். போக்குவரத்து சாதனங்கள் மற்றும் தோல்பொருட்களால் லாபம் உண்டு.
பத்திரிகை, எழுத்துத் துறையினருக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். மக்கள்நலனில் கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். கொடுக்கல்வாங்கலில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் கேளிக்கை மற்றும் விருந்துகளில் ஈடுபாடு உண்டாகும். தாய் வழி உறவினர்களால் அனுகூலம் உண்டு.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்து, சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 5, 8, 9.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, புகை நிறம், இளநீலம்.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் கலைஞானம் அதிகரிக்கும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும். கலைத்துறையினர் முன்னணிக்கு உயருவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேர்க்கை உண்டு. 2-ல் ராகுவும், 8-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.
பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். புதன் பலம் குறைந்திருப்பதாலும் சனி நான்காமிடத்தில் உலவுவதாலும் நண்பர்கள், உறவினர்களால் பிரச்சினைகள் சூழும். வியாபாரிகள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 9
பரிகாரம்: துர்க்கைக்கும் விநாயகருக்கும் முருகனுக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 6-ல் சூரியனும், புதனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கணிப்பொறித் துறையினர் லாபம் அடைவார்கள். சொத்து களால் ஆதாயம் கிடைக்கும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.
தம்பதிகள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டாளிகளால் பிரச்சினைகள் சூழும். பயணத்தின்போது விழிப்புத் தேவை. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். வாரப் பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். சுபச்செலவு உண்டு.
எண்கள்: 1, 3, 5, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 8, 9.
திசைகள்: வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.