Published : 03 Feb 2015 01:30 PM
Last Updated : 03 Feb 2015 01:30 PM

துணை ராணுவப் படை 62,390 காலிப் பணியிடங்கள்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் அடிப்படையில் இந்திய ராணுவத் துணைப் படைகளில் 62,390 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எல்லைக் காவல் படை, மத்திய தொழிற்சாலைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பல படைப் பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பெண்களுக்கு மட்டும் 8,533 பணியிடங்கள் உள்ளன.

வயது:

2015, ஆகஸ்ட் 1 அன்று 18 வயதிலிருந்து 23 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் மெட்ரிகுலேஷனோ பத்தாம் வகுப்போ படித்திருக்க வேண்டும்.

தேர்வுசெய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி, உடல் திறன் சோதனை, எழுத்துத் தேர்வு, மருத்துவச் சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.50. இதை ஆன்லைனிலோ வங்கி செல்லான் மூலமோ கட்டலாம். பெண்கள், எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணக் கட்டண விலக்கு உண்டு. தபால் வழியாக விண்ணப்பிக்கும் ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்திய ஆள்தேர்வு அஞ்சல் முத்திரை மூலம் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் >http://ssconline.nic.in/ அல்லது > http://ssconline2.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிரிவு 1-க்கான ஆன்லைன் விண்ணப்பம் 24.01.015 முதல் 21.02.2015வரையிலும், பிரிவு 2-க்கான ஆன்லைன் விண்ணப்பம் 24.01.2015 முதல் 23.02.2015வரையிலும் செயல்படும்.

தபால் வழியாக விண்ணப்பிக்கும் ஜம்மு, காஷ்மீர் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பங்களை 02.03.2015க்குள் அனுப்ப வேண்டும்.

நினைவில்கொள்ள வேண்டிய நாள்கள்:

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: பிரிவு-1 21.02.2015 மாலை 5:00 மணி

பிரிவு-2 23.02.2015 மாலை 5:00 மணி

தபால் வழி விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய நாள்: 02.03.2015 மாலை 5:00 மணி

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்க வேண்டிய நாள்: 15.04.2015 15.05.2015

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 04.10.2015

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x