

துலாம்
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் 5-ல் அமர்ந்து, 9-ல் உலவும் குருவால் பார்க்கப்படுகிறார். இதனால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். பண நடமாட்டம் அதிகரிக்கும். மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். அலுவலகப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோரது நிலை உயரும். சுப காரியங்கள் நிகழும்.
கணவன் மனைவி உறவு நிலை ஒருநாள் போல் மறுநாள் இராது. கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். ஜன்ம ராசியில் வக்கிர சனியும் ராகுவும் உலவுவதாலும், 7-ல் சூரியன், புதன், கேது ஆகியோர் சஞ்சரிப்பதாலும் உடல்நலனில் கவனம் தேவை. பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது அவசியமாகும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம். l எண்கள்: 3, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது. கருமாரி அம்மனை வழிபடவும்.
விருச்சிகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ஆமிடத் திலும் சுக்கிரன் 4-லும், சூரியன், புதன், கேது ஆகியோர் 6-லும் உலவுவது சிறப்பாகும். 12-ல் உலவும் வக்கிர சனியும் நலம் புரிவார். செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்து உபசாரங்கள், கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். எதிரிகள் விலகிப் போவார்கள். நிர்வாகத் திறமை கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். வீண் செலவுகள் குறையும். பேச்சில் திறமை வெளிப்படும். கணவன் மனைவி உறவுநிலை சீர்பெறும். வியாபாரம் பெருகும். வழக்கில் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசைகள்: கிழக்கு, வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன், சிவப்பு. l எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: குருவுக்கும் ராகுவுக்கும் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. வியாழக்கிழமைகளில் குருவுக்கும் தட்சிணா மூர்த்திக்கும், வெள்ளிக்கிழமைகளில் துர்கைக்கும் அர்ச்சனை செய்வது சிறப்பாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் அவர்களது ஆசிகளைப் பெறுவது நல்லது.
தனுசு
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாயும், 11-ல் சனி, ராகு ஆகியோரும் உலவுவதால் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஆதாயம் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். சுப காரியச் செலவுகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சுகானுபவம் உண்டாகும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும்.
இயந்திரப் பணிகள் லாபம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும். பயணம் சம்பந்தமான இனங்கள் ஆக்கம் தரும். ஸ்பெகுலேஷன் துறைகளால் ஓரளவு லாபம் கிடைக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் ஏற்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 20, 21. l திசைகள்: தென் கிழக்கு, தென்மேற்கு, மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம். l எண்கள்: 7-ஐத் தவிர இதர எண்கள்.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.
மகரம்
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 10-ல் ராகுவும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். புதியவர்கள் அறிமுகமாகி, உங்க ளுக்கு உதவுவார்கள். குடும்ப நலம் திருப்தி தரும். விருந்து, உபசாரங்களிலும், கேளிக்கைகளிலும் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். மாணவர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். ஆடவர்களுக்குப் பெண்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தாய் நலனிலும் உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும். அலைச்சலைத் தவிர்க்க இயலாது. இயந்திரப் பணியாளர்களும் இன் ஜினீயர்களும் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 21. l திசைகள்: தென் கிழக்கு, தென்மேற்கு, வடக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, கறுப்பு, பச்சை. l எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: குரு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. தட்சிணாமூர்த்தியையும், விநாயகரையும் தொடர்ந்து வழிபடவும். பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவது நல்லது.
கும்பம்
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் சூரியனும் கேதுவும், 5-ல் குருவும் உலவுவதால் கலைஞானம் பிரகாசிக்கும். தோற்றப்பொலிவு கூடும் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிர்ப்புக்கள் குறையும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். நிர்வாகத்திறமை கூடும்.
பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். புதன் 3-ல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை செலுத்தவும். விளையாட்டு, விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களின் நலனில் கவனம் தேவைப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: திருமாலை வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.
மீனம்
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். வாழ்க்கை வசதிகள் பெருகும். மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் வீண்வம்பு, வழக்குகளில் ஈடுபடலாகாது.
பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொண்டு, இனிமையைக் கூட்டிக் கொள்வது நல்லது. அலைச்சல் அதிகரிக்கவே செய்யும். அதனால் உடல் சோர்வும் ஏற்படும். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. கெட்டவர்களின் சகவாசம் அடியோடு கூடாது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. குடும்பத்தில் சலசலப்புக்கள் இருந்துவரும்.
வாரப் பின்பகுதியில் நற்காரியங்களில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 20. l திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பச்சை. l எண்கள்: 5, 6. வாரப் பின்பகுதியில் எண் 2-ம் நலம் தரும்.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிக்கவும்.