

மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 11-ம் இடத்தில் சுக்கிரனுடன் உலவுவதாலும் சூரியன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் அனுகூலம் உண்டாகும். இயந்திரப் பணியாளர்களது நிலை உயரும். கூட்டுத் தொழிலில் அபிவிருத்தி காணலாம். உடல் நலம் சீராக இருந்துவரும்.
கணவன் மனைவி உறவுநிலை சீராகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். தொழிலில் அக்கறை செலுத்தி, அயராது பாடுபட்டால் வளர்ச்சி காணலாம். 8-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கும், அரசுப் பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9, 11.l
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 8-ல் புதனும், 10-ல் செவ்வாயும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கை நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவி புரிவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்களது நிலை உயரும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும்.
வியாபாரம் பெருகும். 5-ல் ராகு இருப்பதால் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 8-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழும். 10-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனத்துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9, 11.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை.
எண்கள்: 5, 7, 9.
பரிகாரம்: ராகுவுக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 9-ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான தகவல் ஒன்று வந்து சேரும். மன உறுதி கூடும். அலைச்சல், உழைப்பு ஆகியவை கூடினாலும் பயன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
8-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மாணவர்களது நிலை உயரும். 10-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் எதிர்ப்புகள் குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9, 11.
திசைகள்: வடமேற்கு, மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7, 8.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது. துர்கா கவசம் பாராயணம் செய்யவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 6-ல் புதனும் 8-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்ப நலம் சீராகும். பேச்சில் இனிமையும் கடுமையும் இரண்டுமே வெளிப்படும். நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். மாணவர்களது திறமை பளிச்சிடும்.
கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். மாதர்களது எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். 8-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வாழ்க்கைத் துணைவரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.
எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். புதியவற்றைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் ஏற்படும். 10-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடம் மாறுவதால் தெய்வ காரியங்களிலும் தர்ம காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9, 11
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு
நிறங்கள்: புகை நிறம், கறுப்பு, பச்சை, இளநீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சூரியன் 6-லும், வக்கிர குரு 12-லும் உலவுவது சிறப்பாகும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. உடல் ஆரோக்கியம் சீராகவே இருந்துவரும். முக்கியமான ஓரிரு காரியங்கள் இப்போது நிறைவேறும். பண நடமாட்டம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். அரசுப்பணியாளர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கும். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
8-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். தொழில் நுட்பத்திறமை பளிச்சிடும். 10-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடம் மாறி, கேதுவுடன் கூடுவது சிறப்பாகாது. சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம். எதிலும் நிதானமாக யோசித்து செயல்படவும். சகோதர நலம் கவனிக்கப்பட வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9, 11.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3.
பரிகாரம்: நாகரை வழிபடவும். சனிப் பிரீதி செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும் 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். நண்பர்களும் உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 8-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறுவதால் மக்களால் நலம் உண்டாகும்.
10-ஆம் தேதிமுதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறி கேதுவுடன் கூடுவதாலும், சுக்கிர பலம் குறைந்திருப்பதாலும் கணவன் மனைவி இடையே சண்டை, சச்சரவுகளும், கருத்து வேறுபாடுகளும் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகிவருவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணியுரியும்போதும், ஜலம் நிறைந்துள்ள இடங்களில் செல்லும்போதும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 8, 9, 11.
திசைகள்: வடக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 8, 9.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.