

உலகில் மிகவும் சிரமம் உள்ள விஷயம் துறவு நிலை ஆகும். வேடத்தால் அந்த மாதிரி இருப்பதைக் காட்டிலும் உண்மையான தியாகங்களாலேயே நற்றவம் செய்ய முடியும்.
உலகில் உழைப்பால் அன்றி எதையும் சுலபமாக அடைந்துவிட முடியாது. செல்வந்தனாக ஆக பூர்வபுண்ணியமும் ஒரு சில சாமார்த்தியங்களும் இருந்தால் போதும். பணக்காரனாகிவிடலாம். ஆனால் ஒரு பித்தனாக சித்தனாக முத்தனாக ஆவதற்கு மிகப் பெரிய தியாகமும் தியானமும் தேவை.
பகவத் கீதை பனிரெண்டாவது அத்யாயமான பக்தி யோகத்தில் பனிரெண்டாவது ஸ்லோகத்தில் கண்ணன் இதற்கு உபாயம் கூறுகிறான். " ஸ்ரேயோகி ஜ்ஞானம் அப்யாசாத்..." என்றதின் விளக்கத்தை உணருங்கள். தியாகமும் தியானமும் மட்டுமே ஒரு ஜீவனை மகான் ஆக மாற்றும்.
மகான் ஆக வேண்டும் என்ற ஆசை தவறானது அல்ல. அதேசமயம் அந்த உன்னத நிலையை அடைவது சாதாரணமானது அல்ல. ஒரு மடத்தைக் கட்டி நமக்கு நாமே மகான் என்ற பட்டத்தைப் போட்டுக்கொண்டால் உலகம் நம்பாது என்பதை உணரவேண்டும்.
தியான யோகம் (யோக சாஸ்திரம்)
என்.நாராயணராவ்
வெளியீடு: சங்கர் பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி,
2-வது தெரு, ராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம், சென்னை- 600 049.
தொலைபேசி: 26502086.