

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அத்தியூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த இடம் அத்திமரங்கள் நிறைந்த வனப்பகுதியாக விளங்கியதால், அத்தியூர் என்ற பெயர் வந்துள்ளது.
மேலும், இந்த கிராமத்தில் உள்ள அனைத்து நிலங்களும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமானதாக இருந்துள்ளது. இதனால், தற்போது வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள அனந்த புஷ்கரணி குளத்தின் அடிவாரத்தில் உள்ள அத்திகிரி வரதர் சுவாமி உருவச்சிலை, இந்த ஊரில் விளைந்த அத்தி மரத்திலிருந்து செய்யப்பட்டது என்பது ஐதீகம்.
2010-ம் ஆண்டு ஜூன் மாதம் அத்தியூர் கிராமத்தில் ஏரியின் நீர்வரத்து கால்வாயை தூர்வாரும்போது, மண்ணுக்குள் புதைந்திருந்த திரிபுர சுந்தரி சமேத கைலாசநாதர் மற்றும் நந்தீஸ்வரர் கற்சிலைகள் கண்டறியப்பட்டன. இதேபோல், கிணற்றின் தூர்வாரும் பணிகளின் போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத அத்தி வரதராஜப் பெருமாள் மற்றும் விஸ்வக்சேனர் ஆகிய கற்சிலைகளும் கண்டறியப்பட்டன.
கண்டறியப்பட்ட கற்சிலைகள் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். அத்தியூரை சேர்ந்த கிராமத்தினர் தற்போது அங்கே புதிய சிவாலயம் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
உங்கள் பகுதியில் நடைபெறும் சமயத் திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். ஆனந்த ஜோதி ஆன்மிக இணைப்பு குறித்த உங்கள் கருத்துகளையும் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
உங்கள் படைப்புகளையும் எண்ணங்களையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
கடிதத் தொடர்புக்கு:
தி இந்து, கஸ்தூரி மையம், எண்.124,
வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: anandhajothi@thehindutamil.co.in