திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 2-ம் நாள் பவித்ரோற்சவம்

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 2-ம் நாள் பவித்ரோற்சவம்
Updated on: 
1 min read

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் பவித்ரோற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் 2-ம் நாளான நேற்று, காலை தாயாருக்கு சுப்ரபாத சேவை நடைபெற்றது. அதன்பின்னர், சகஸ்ரநாம அர்ச்சனை, நித்ய அர்ச்சனை நடந்தது. இதனை தொடர்ந்து, காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை பவித்ர பட்டு நூல் வண்ண மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டது.

மூல மூர்த்தி, உற்சவ மூர்த்தி, உப சன்னதிகள், பரிகார தேவதைகள், விமான கோபுரம் மற்றும் கொடிமரத்திற்கு பவித்ர பட்டு நூல் மாலைகள் சமர்ப்பிக்கப்பட்டன. மாலை 6 மணி முதல் 8 மணி வரை யாக சாலையில் ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், கூடுதல் நிர்வாக அதிகாரி டாக்டர் சரத், சந்திரகிரி எம்.எல்.ஏ புலிபர்த்தி நானி, தேவஸ்தான அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 2-ம் நாள் பவித்ரோற்சவம்
திமுக, அதிமுக, பாஜக இடையே ரகசிய கூட்டணி: மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் விஜய் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in