

அலங்கார உருவில் பெருமாளைக் காண்பதால், பக்தர்களுக்கு மன ஒருமை கிடைக்கிறது. அலங்காரம் ஆனந்தம் தருகிறது. இதனால் கவனம் சிதறாமல், பகவானிடம் பக்தி செலுத்த இயலும். இப்படி அலங்காரத் தோற்றத்தில் காணக் கிடைக்கும் பெருமாள், சென்னையில் கோயில்தோறும் கொண்ட கோலத்தைக் காண்போம்.
பாரிமுனை
ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஸ்ரீ தேவி, பூ தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிப்பது, பாரிமுனை தையப்ப முதலித் தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோயிலில். இக்கோயிலில் தனிக்கோல் நாச்சியாராக அமர்ந்த திருக்கோலத்தில் தாயார் காட்சி அளிக்கிறார். இங்கே சுதர்சன ஹோமம் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது. பொதுவாக வைணவத் தலங்களில் நடைபெறுவது போல ஆடிப்பூரம் இங்கு விசேஷம்.
நன்மங்கலம்
வேளச்சேரிக்கு அருகில் உள்ள நன்மங்கலத்தில் நீலவண்ணப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ளார். பல்லவ மன்னர்கள் காலத்தில் இக்கோயில் உருவானதாக திருக்கோயில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாலயத்தில் மூலவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராகக் காட்சி அளிக்கிறார். நீலவண்ணப் பெருமாள் இங்கு நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பது அற்புதம்.
படங்கள்: எம்என்எஸ்