Published : 09 Jan 2015 10:27 AM
Last Updated : 09 Jan 2015 10:27 AM

பிஆர்பி பாலீஷ் ஆலையில் திடீர் சோதனை: இயந்திரங்களுக்கு சீல் வைப்பு

சீல் வைக்கப்பட்டுள்ள பிஆர்பி பாலீஷ் ஆலையிலிருந்து கிரா னைட் கற்கள் கடத்தப்படுவதாக வும், அத்துமீறி நுழைந்து 400 பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் ஆட்சியருக்கு வந்த புகாரின்பேரில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி இயந்திரங்களுக்கு சீல் வைத்தனர்.

மதுரையை தவிர இதர மாவட் டங்களில் பிஆர்பி குவாரிகளை செயல்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள

மேலூர் தெற்குத்தெருவில் உள்ள பிஆர்பி கிரானைட் பாலீஷ் தொழிற்சாலையில் ஒருவாரமாக இரவு நேரத்தில் ஏராளமான விளக்குகள் எரியவிடப்பட்டுள் ளன. இங்கு ஏற்கெனவே அரசு குறியீடு செய்துள்ள கிரானைட் கற்கள் கடத்தப்படுவதாகவும், 400 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் மதுரை ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு புகார் வந்தது. ஆட்சியர் உத்தர வின்பேரில் மதுரை கோட்டாட்சி யர் செந்தில்குமாரி, மேலூர் தாசில் தார் மணிமாறன், கூடுதல் எஸ்பி. ஜான்ரோஸ் தலைமையில் ஏராள மான அதிகாரிகள் மற்றும் போலீ ஸார் வியாழக்கிழமை பிஆர்பி பாலீஷ் ஆலைக்கு சென்றனர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்திருந்த பிஆர்பி வழக்கறிஞர் கள் தொழிற்சாலை முன் கூடி னர். அதிகாரிகளை உள்ளே அனு மதிக்க மறுத்த வழக்கறிஞர்கள், தொழிற்சாலைக்கு சீல் ஏதும் வைக்கப்படவில்லை. தொழிற் சாலையை நாங்கள்தான் செயல் படுத்தாமல் உள்ளோம். இதை ஆய்வு செய்ய நீதிமன்ற ஆணை வேண்டும் எனக் கேட்டனர். ஏற் கெனவே சீல் வைக்கப்பட்டவை சரியாக இருக்கிறதா என பார்வை யிடுவதற்காவே வந்துள்ளதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அதிகாரிகள் அனுமதிக்கப் பட்டனர். தொழிற்சாலைக்குள் இருந்த கற்கள், ஆவணங்கள் இருந்த அறைகள் உள்ளிட்ட வற்றை அதிகாரிகள் பார்வை யிட்டனர். சீல் வைக்கப்பட்ட பொருட்கள் பட்டியலில் உள்ளபடி சரியாக உள்ளதா என கண்காணித்தனர்.

இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர், ஏராளமான இயந் திரங்கள் இயங்காத நிலையிலும் சீல் வைக்கப்படாமலும் இருந்தன. இவற்றுக்கு நேற்று சீல் வைத் தோம். ஏற்கெனவே இருந்த பொருட்கள் ஏதும் கடத்தப்பட வில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம். இது குறித்து ஆட்சி யரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

உ.சகாயம் 4-ம் கட்ட ஆய்வை தொடக்கியுள்ள நிலையில், அவர் இன்று மேலூர் குவாரி பகுதியில் நேரடி ஆய்வை மேற்கொள்கிறார். இந்நிலையில் பல்வேறு துறை அதிகாரிகள் பிஆர்பி தொழிற் சாலையில் திடீர் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x