Published : 20 Jan 2015 09:43 AM
Last Updated : 20 Jan 2015 09:43 AM

பணி செய்யும் கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்க வேண்டும்: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரிக்கை

கிராம நிர்வாக அலுவலர்கள், பணி செய்யும் கிராம எல்லை யில் தங்கிப் பணிபுரிய வேண் டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, காஞ்சி மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர் பொன்மொழி கூறியதாவது: தமிழகத்தில் 16,564 கிராம நிர்வாக அலுவலர்களால், கிராமப் பகுதிகளில் நிர்வாகங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற் கொண்டு, வருவாய் சம்பந்தப் பட்ட ஆவணங்களின் விவரங் களைப் பாதுகாப்பது மற்றும் கிராமங்களில் நிகழும் இயற்கைக் குப் புறம்பான இறப்புகள், சாதி கலவரம், அரசு நில ஆக்கிரமிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்குத் தெரி விக்க வேண்டிய பொறுப்புகள் உள்ளன.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணி பொறுப்பில் உள்ள கிராமங் களில் வசிக்காமல், தொலைவில் வசிக்கின்றனர்.

இதனால், கிராமப் பகுதிகளில் நடைபெறும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை அவர்களால் உடனடியாக கண்காணிக்க முடியவில்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிப் பொறுப்பில் உள்ள கிராமங்களில்தான் வசிக்க வேண்டும் என உத்தர விட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாவில்லை. கிராம நலன்களை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x