Published : 25 Dec 2014 05:15 PM
Last Updated : 25 Dec 2014 05:15 PM

வார ராசிபலன் 25-12-2014 முதல் 31-12-2014 வரை துலாம் முதல் மீனம் வரை

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரனும், 6-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் ஆதரவாக இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். 28-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது நிலை உயரும்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவது விசேஷமாகும். புதிய சொத்துகள் சேரும். வீட்டுக்குத் தேவையான பொருட்களின் சேர்க்கையும் நிகழும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். உற்சாகமாக நடைபோடுவீர்கள். எதிரிகள் விலகிப் போவார்கள். உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்:டிசம்பர் 25, 26, 28.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, வான் நீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: துர்கையம்மனுக்கு நெய் தீபமேற்றி, குங்கும அர்ச்சனை செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 3-ல் அதிபலம் பெற்றிருப்பதாலும், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும் வெற்றி வாய்ப்புகள் கூடும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். பிரச்சினைகள் எளிதில் தீரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இஞ்சினீயர்களது நிலை உயரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். ஆன்மிகவாதிகள் புகழ் பெறுவார்கள். சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. 30-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறுவதால் சுகம் கூடும். வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்:டிசம்பர் 25, 26, 28.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.

எண்கள்: 4, 5, 6, 9.

பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கையைப் பெறுவீர்கள். கலைஞர்களுக்குப் புகழும் பொருளும் சேரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கியே இருப்பார்கள். புதியவர்களது நட்புறவு கிடைக்கும். மாதர்களது எண்ணம் ஈடேறும். மாணவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களின் எண்ணம் ஈடேறும். உடன்பிறந்தவர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். குடும்ப நலம் சீராகும். பேச்சாற்றல் கூடும். வசீகர சக்தி ஏற்படும். பொருள்வரவு சற்று அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். வியாபாரம், கணிதம், எழுத்து, விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாரப் பின்பகுதியில் அலைச்சல் சற்று அதிகமாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26, 28.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. பார்வையற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 11-ல் சனி, 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மிகப் பணிகளில் கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 9-ல் ராகுவும், 12-ல் சூரியனும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. அரசு அபராதம் கட்ட நேரலாம். கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். 28-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படவும். 30-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 26, 28.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.

எண்கள்: 6, 7, 8.

பரிகாரம்: சூரிய வழிபாடு அவசியம். கோதுமை தானம் செய்வது நல்லது. பார்வை இல்லாதவர்களுக்கு உதவி செய்யவும்.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சனியும், 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் உலவுவது சிறப்பு. பிதுரார்ஜித சொத்துகள் கிடைக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். மாணவர்களது திறமை வெளிப்படும். பெண்களின் நிலை உயரும். தொழிலில் மாற்றம் காணச் சந்தர்ப்பம் உருவாகும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். 28-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். வாழ்க்கை வசதிகள் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். தான, தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வாரப் பின்பகுதியில் பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. எதிலும் அவசரம் கூடாது. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியம் தேவை. உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 26, 28.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, வெண்மை, நீலம்.

எண்கள்: 1, 5, 6, 8.

பரிகாரம்: துர்கை, விநாயகர், சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது. ஏழை, எளிபவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் செவ்வாய் உலவுவது சிறப்பு. ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் லாபம் கிடைத்துவரும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். சுபச் செலவுகள் கூடும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். இஞ்சினீயர்களது நிலை உயரும். 28-ம் தேதி முதல் புதனும், 30-ம் தேதி முதல் சுக்கிரனும் 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பிரச்சினைகள் எளிதில் தீரும். மன உற்சாகம் பெருகும். தந்தையால் அனுகூலம் ஏற்படும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: டிசம்பர் 25, 28.

திசைகள்: தெற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: கருஞ்சிவப்பு, பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 5, 9.

பரிகாரம்: ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. நாகரை வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x