பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 96வது ஜெயந்திவிழா

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 96வது ஜெயந்திவிழா
Updated on
1 min read

பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களின் 96வது ஜெயந்திவிழாவில் திருவண்ணாமலை மகானின் அருளாசிகளைப் பெற வெள்ளமென மக்கள் திருவல்லிக் கேணியில் திரண்டனர். திருவண்ணாமலையில் பல ஆண்டுகளாக வாழ்ந்து அங்கேயே முக்தியடைந்து சமாதியானவர் மகான் யோகி ராம்சுரத்குமார்.

“நான் மிகச் சாதாரணமானவன். கடவுளாகிய நமது தந்தை எனது பெயரை அழைத்தால் உங்களுக்கு நிச்சயம் உதவுவார். எனக்கும் அவருக்கும் அத்தகைய ஒப்பந்தம்.ராமநாமமே எல்லாம்.அதனை 24 மணிநேரமும் ஜெபியுங்கள்.அதுவே உங்களை காக்கும்” என்பது அவரது பக்தர்களுக்கு அளித்த அருள்மொழி.

அவரின் அருளாசிகளைப் பரப்புவதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மயிலை யோகி ராம்சுரத்குமார் சத் சங்கத்தினரால் அவரது ஜெயந்திவிழா டிசம்பர் 1-ந்தேதி மாலையில் சிங்கராச்சாரி தெருவில் உள்ள ராகவேந்திரர் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

எழுத்தாளர் பாலகுமாரனும் அவரது மனைவி சாந்தா பாலகுமாரனும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

கலைமாமணி விருது பெற்ற பாடகர் ஓ.எஸ். அருணின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன், ஜோதிடர் ஷெல்வி,ஜோதிடர் வித்யாதரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விழாவின் நிறைவில் அனைவரும் விருந்து படைக்கப்பட்டது. பகவான் யோகி ராம்சுரத்குமாரின் திருவுருவ படமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in