Published : 17 Dec 2014 11:01 am

Updated : 17 Dec 2014 11:02 am

 

Published : 17 Dec 2014 11:01 AM
Last Updated : 17 Dec 2014 11:02 AM

ஆக்ரோஷமான அணுகுமுறை தொடரும் - தோனி

காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத தோனி, 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்குத் தலைமை தாங்குகிறார். பிரிஸ்பேன் டெஸ்ட் பற்றி அவர் கூறியதாவது:

ஆக்ரோஷமான அணுகுமுறைதான் சரியானது. கடந்த போட்டியில் இலக்கை விரட்ட முயன்றதை மிக முக்கியமானதாக கருதுகிறேன். அந்த அணுகுமுறை அடுத்த டெஸ்டுகளிலும் தொடரும். தொடக்க ஆட்டக்காரர்களும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் எந்த மாதிரியான கூட்டணியை அமைக்கிறார்கள் என்பதை பொறுத்து எங்களுடைய அணுகுமுறை அமையும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் எனக்கு காயம் ஏற்பட்டது. போட்டிகளில் ஆடும்போது காயம் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், சாம்பியன்ஸ் லீக் மற்றும் இந்தியாவில் ஒருநாள் போட்டிகளில் ஆடியபோது காயத்தின் தன்மை மோசமாகிவிட்டது. எனக்கு 20-25 நாள்கள் ஓய்வு தேவைப்படும் என்கிற நிலையில், இந்த டெஸ்ட் தொடரும் அடுத்து வருகிற உலகக்கோப்பையும் முக்கியம் என்பதால் சில போட்டிகளில் ஆடவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

கோலி அருமையாக அணியை வழிநடத்தினார். அடிலெய்டு டெஸ்டில் மட்டுமில்லாமல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். அவர் மிகவும் ஆக்ரோஷமான குணாதிசயம் கொண்டவர். என்னை விட சிறிது வித்தியாசமானவர். எல்லா தனிநபர்களும் ஒரேமாதிரி அணியை வழிநடத்த வேண்டாம் இல்லையா!

அடிலெய்டு ஆடுகளத்தோடு ஒப்பிடுகையில் பிரிஸ்பேன் ஆடுகளம் வித்தியாசமானது. இங்கு பந்து நன்கு எகிறும். ஸ்பின்னர்களின் பங்கு குறைவாகவே இருக்கும். ஆனால் ஜான்சன், ஸ்டார்க்கின் கால்தடங்கள் ஆஃப் ஸ்பின்னருக்கு உதவக்கூடும். அஸ்வின் பின்வரிசையில் நன்றாக விளையாடக்கூடியவர். பின்வரிசை பேட்ஸ்மேன்கள் விரைவாக ஆட்டமிழப்பதால் ஒழுங்காக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் நல்ல துணையில்லாமல் தவிக்கிறார்கள். அஸ்வின் அந்த இடத்தில் இருந்தால் உதவியாக இருக்கும்.

டர்பன், ஜோகன்னஸ்பர்க், பெர்த் போன்ற வேகமான ஆடுகளங்களில் இதற்கு முன்பு நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதுபோன்ற ஆடுகளங்களில் எங்கள் பவுலர்களால் சுலபமாக விக்கெட்டுகளை எடுக்கமுடியும். அவை, எங்கள் இளைய வீரர்களுக்கு சவால் அளிக்கக் கூடியவை என்றார்.

தோனிஆஸ்திரேலிய தொடர்டெஸ்ட் தொடர்ஆக்ரோஷம்

You May Like

More From This Category

More From this Author