Last Updated : 09 Dec, 2014 08:06 AM

 

Published : 09 Dec 2014 08:06 AM
Last Updated : 09 Dec 2014 08:06 AM

எங்களுக்கு நடிக்க மட்டுமல்ல, அடிக்கவும் தெரியும்: விஷால், மன்சூர் அலிகானுக்கு நாடக நடிகர்கள் மிரட்டல்

திருச்சி நாடக நடிகர்கள் சங்க விழாவில் நடிகர் நாசர், விஷால் குறித்து விமர்சனம் செய்த பிரச்சினை முடிவதற்குள் மதுரையிலும் விஷால், மன்சூர் அலிகானுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை உட்பட 16 இடங்களில் நாடக நடிகர் சங்கங்கள் உள்ளன. இவை தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்புகள் என்பதால், நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களும் வாக்களிப் பார்கள். பதிலுக்கு செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பதவிகள் இவர்களுக்கு வழங் கப்படும். அடுத்த ஆண்டு ஜூலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.

கடந்த தீபாவளியையொட்டி திருச்சியில் நடந்த நலிந்த கலைஞர் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும், துணைத் தலைவர் கே.என்.காளையும் நடிகர் நாசர், விஷால் ஆகியோரை மோசமாக விமர்சித்ததாக சர்ச்சை கிளம்பியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஷால், நாசர் ஆகியோர் தனித்தனியாக நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட இருவரும் சங்கத்தில் மன்னிப்பு கேட்ட பிறகும், இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத சூழலில், மதுரையில் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

மதுரையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த சங்கரதாஸ் சுவாமி களின் குருபூஜை விழாவில், தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் கே.என்.காளை, செயற்குழு உறுப் பினர் பிரசாத் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழ் நாடு நாடக நடிகர் சங்க துணைத் தலைவர் கலைமணி பேசும்போது, “நாடக நடிகர்களுக்காக போராடி வருகிற சரத்குமார், ராதாரவி போன்றவர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்தே ஒதுக்க விஷால் போன்ற இளைய நடிகர்கள் முயற்சி செய்கிறார்கள். நாடக நடிகர்களை மன்சூர் அலிகான் இழிவாகப் பேசுகிறார்.

நாடக நடிகர்களை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உட்கார வைத்தவர் ராதா ரவி. அவர் இல்லை என்றால், நமக்கு சங்கம் எங்கிருக்கிறது என்றே தெரிந்திருக்காது. சரத்குமார், ராதாரவி ஆகியோரது கரங் களை நாம் வலுப்படுத்த வேண் டும். சங்கத்துக்கு எதிராகப் பேசும் விஷால், மன்சூர் அலிகானை கண்டிக்கிறோம். நாடகக்காரர் களுக்கு நடிக்கவும் தெரியும், அடிக்கவும் தெரியும் என்றார்.

தென்னிந்திய நடிகர் சங்க நிர் வாகிகள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x