

“புளிசேர் பழமானாற் போற்புறம் போ டுள்ளின்
முளைதானும் வேறாய் முளைபோய்த் - துளைமாண்ட
ஊசிக்கும் பாசம் ஒழிந்ததுபோ லொப்பாருக்(கு)
ஆசைக்கே டானந்த மாம்”
தாமல் என்னும் கிராமத்தில் சேஷாத்ரிக்கு நெருங்கிய உறவினரான பரசுராம சாஸ்திரிகள் வசித்து வந்தார். சேஷாத்ரியின் நிலையக் கேள்வியுற்ற அவர், சேஷாத்ரியைத் திருத்த முயன்றார். மயானத்தில் ஜபம் செய்வதையும் அலைவதையும் கண்டித்தார். ஆனால், “நான் நைஷ்டித பிரம்மசாரி. உபாசகன், உபாசகனுக்கு காலநியமம், தேசநியமம் கிடையாது” என்று சேஷாத்ரி பதிலளித்தார். பரசுராம சாஸ்திரி வெகுண்டு “நீ தினமும் மயானம் சென்று வருவதால் இவ்வீட்டிற்குள் நுழையக் கூடாது” என்றார். சேஷாத்ரியும் இனி நிர்பந்தம் ஒழிந்தது என மகிழ்ந்தவராய் வீட்டை விட்டு அகன்றார்.
ஐந்தாறு மாதங்கள் ஓடின. வழக்கம் போலவே சேஷாத்ரி தனது உபாசனைகளை நடத்தி வருவாராயினர். அப்பொழுது விசுவனாதர் கோயிலில் பாலாஜி ஸ்வாமிகள் என்ற தபஸ்வி வந்திருந்தார். சேஷாத்ரியின் பக்குவ நிலையை உணர்ந்தார். தனது ஐந்தாவது சீடான ஏற்றுக் கொண்டு ஸன்னியாசம் கொடுத்து மகாவாக்கியங்களை உபதேசித் தருளினார்.
ஐந்தாறு மாதங்கள் ஓடின. வழக்கம் போலவே சேஷாத்ரி தனது உபாசனைகளை நடத்தி வருவாராயினர். அப்பொழுது விசுவனாதர் கோயிலில் பாலாஜி ஸ்வாமிகள் என்ற தபஸ்வி வந்திருந்தார். சேஷாத்ரியின் பக்குவ நிலையை உணர்ந்தார். தனது ஐந்தாவது சீடான ஏற்றுக் கொண்டு ஸன்னியாசம் கொடுத்து மகாவாக்கியங்களை உபதேசித் தருளினார்.
ஸ்ரீசேஷாத்ரி, ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளானார். இனி நாம் அவரை ஸ்வாமிகள் என்றே அழைப்போம். ஸ்வாமிகளின் ஞான நிலையின் மேம்பாட்டையும் சமதர்சனத்தையும் ஜீவன் முத்த நிலைமையையும் விளக்கும் நிகழ்ச்சிகள் தோன்றலாயின.
அப்போது ஸ்வாமியின் தந்தைக்கு சிரார்த்தம் வந்தது. சிற்றப்பா ராமஸ்வாமி ஜோசியர், ஸ்வாமியிடன் வந்து வெகு கஷ்டப்பட்டு அவரை வீட்டிற்குக் கொண்டு சென்றார். சிரார்த்த தினத்தன்று அவர் அங்கு அவசியம் இருக்க வேண்டும் என்பதால் ஓர் அறையில் அடைத்து, வெளிப்பக்கம் பூட்டிவிட்டுச் சாவியைத் தன் இடுப்பிலேயே கவனமாக வைத்திருந்தார். மாலை இரண்டு மணிக்கு வலம் வந்து பிதிரர்களது ஆசியைப் பெறும் நிகழ்ச்சிகாக ஸ்வாமியை அழைக்க வேண்டி, அறையைத் திறந்து பார்த்தபொழுது அவ்வறையில் எங்கு தேடியும் ஸ்வாமியைக் காணோம். அவ்வளவுதான். ஸ்வாமியின் யோக ஸித்தி காட்டுத்தீப்போலப் பரவியது.
இப்பொழுது ஸ்வாமி எங்கே இருக்கிறார் என்று தேட ஆரம்பித்தனர். அப்பொழுது ஸ்வாமி காவேரிப்பாக்கத்தில் இருந்தார். அது காஞ்சிக்கு மேற்கே இருபது கல் தொலைவில் இருந்த ஒரு கிராமம். அங்குள்ள முத்திச்வரர் கோயிலில் புன்னைமரத்தடியில் ஸ்வாமியின் மேல் சர்ப்பமொன்று குடை பிடிக்க, அங்கிருந்தோர் அதனைக் கண்டு வியந்து ஸ்வாமியை வணங்கினர். செய்தியறிந்த ராமஸ்வாமி ஜோசியரும் அவர் மனைவியும் காவேரிப்பாக்கம் வந்து, ஸ்வாமியை வீட்டிற்கு வர வேண்டினர்.
‘திருவண்ணாமலை ஸ்ரீமத் சேஷாத்ரி ஸ்வாமிகள் வரலாறு’ புத்தகத்தில் இருந்து.
ஆசிரியர்: சேக்கிழார்தாசன் டாக்டர் ராம.ராமசேஷன், வெளியீடு: திருப்புகழ் பதிப்பகம், ஜி - 1, ராஜ் அண்ட் கோதை நிவாஸ், காமராஜ் நகர், சபரி நகர் விரிவு, மேடவாக்கம், சென்னை - 600 100. தொலைபேசி: 044-22773536