Last Updated : 14 Jul, 2019 02:56 PM

 

Published : 14 Jul 2019 02:56 PM
Last Updated : 14 Jul 2019 02:56 PM

ஆடி முதல் வாரம் இப்படித்தான்!

ஆடி 1, ஜூலை 17, புதன்கிழமை. பிரதமை. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. ஆஷாட பஹுள பிரதமை. ஆடிப்பண்டிகை தட்சிணாயன புண்ய காலம். கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகைக்கு லட்சார்ச்சனை. திருக்கடையூர், திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர், திருக்குவளை தியாகராஜ சுவாமி ஆகியோருக்கு அபிஷேகம். புதுக்கோட்டை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை.

 

ஆடி 2, ஜூலை 18, வியாழக்கிழமை. துவிதியை. திருவோண விரதம்.

 

ஆடி 3, ஜூலை 19, வெள்ளிக்கிழமை. திரிதியை. ஆடி முதல் வெள்ளி. அம்மன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள். விசேஷ வழிபாடுகள். திருத்தணி முருகன் கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல். தங்கப்பல்லக்கில் புறப்பாடு. சீர்காழி, திருக்கடையூர், திருப்பனந்தாள், திருவையாறு அம்பாளுக்கு சந்தனக்காப்பு.

 

ஆடி 4, ஜூலை 20, சனிக்கிழமை. கிருஷ்ண பட்ச சங்கடஹர சதுர்த்தி. குச்சனூர் சனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை.

 

ஆடி 5, ஜூலை 21, ஞாயிற்றுக்கிழமை. பஞ்சமி.

 

ஆடி 6, ஜூலை 22, திங்கட்கிழமை. சஷ்டி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. கிருஷ்ண பட்ச சஷ்டி. முருகன் கோயில்களில் சிறப்பு ஆராதனை.

 

ஆடி 7, ஜூலை 23, செவ்வாய்க்கிழமை. சப்தமி. நத்தம் மாரியம்மன் பூத்தேர் பவனி. திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சஷ்டி விரதம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x